ராகுல்: "தமிழ் கலாசாரத்தையோ, உணர்வையோ மோதி அரசால் அழிக்க முடியாது"

ராகுல்காந்தி

பட மூலாதாரம், ANI

"தமிழ் கலாசாரத்தையோ, உணர்வையோ மத்திய அரசால் அழிக்க முடியாது" என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அதன் விவரம்:

ஒரு பண்டிகை சந்தர்ப்பத்தில் நான் இங்கு வந்தேன், எனவே, அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து பேசத் தொடங்க விரும்புகிறேன். நான் ஜல்லிக்கட்டுக்கு சாட்சியாக இருந்தேன். தமிழ் மக்கள் ஏன் ஜல்லிக்கட்டை பாராட்டுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்.

அந்த விளையாட்டு பற்றி நானும் ஏதாவது சொல்ல வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பலர் என்னிடம் குறிப்பிட்டிருந்தார்கள். நான் இன்று இந்த விளையாட்டை நேரிலேயே கண்டேன், இன்று அது நடந்த விதத்தில், காளை காயமடைய வாய்ப்பில்லை என்றே நான் சொல்ல வேண்டும்.

உண்மையில், யாராவது காயமடைய வாய்ப்புள்ளது என்றால், அது அந்த இளைஞர்கள்தான். அவர்கள்தான் ஜல்லிக்கட்டுக்காக மல்லுக்கட்டி ஆடுகிறார்கள். எனவே, அனைவருக்கும் பாதுகாப்பானதாக இந்த ஜல்லிக்கட்டை மாற்ற சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நான் வந்ததற்கு ஒரு முக்கிய காரணம், இன்று டெல்லியில் உள்ள அரசாங்கம் இந்த நாட்டின் கலாசாரங்களை அழிக்க முடியும் என்ற எண்ணத்தில் உள்ளதுதான்.

தமிழ் மக்களின் உணர்ச்சிகளை தங்களால் அடக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். தமிழ் மக்களின் மொழியை நசுக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். தமிழ் மக்களின் உணர்வை அடக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். தமிழ் உணர்வை யாரும் அடக்க முடியாது என்ற செய்தியை அவர்களுக்கு வழங்கவே நான் இங்கு வந்தேன்.

அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலில் தமிழ் உணர்வை அடக்க முடியாது. இரண்டாவதாக, தமிழ் உணர்வை அடக்குவது என்பது நம் நாட்டுக்கு நீங்கள் செய்யக்கூடிய மிக மோசமான காரியம். ஏனென்றால் தமிழ் உணர்வு, இந்தியாவில் உள்ள பல கலாசாரங்கள் மற்றும் பாரம்பரியத்தை போலவே நாட்டின் சாராம்சம், அவை தான் இந்தியாவின் ஆன்மா.

இந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட சிந்தனை, ஒரு குறிப்பிட்ட மொழி, ஒரு குறிப்பிட்ட கருத்து உள்ளது என்ற இந்த எண்ணத்துக்கு நான் முற்றிலும் எதிரானவன். இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. பலவிதமான சிந்தனைகள் இருந்தாலும் அவை அனைத்தும் நமது வலிமைக்கு பங்களிக்கின்றன.

காங்கிரஸ் ராகுல்காந்தி

நான் இங்கு திரும்பி வருவேன், ஒரு முறை அல்ல, பல முறை வருவேன். தமிழ் மக்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொள்வதால் நான் தமிழ் மக்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்கள் தங்களின் கடந்த காலத்தைப் பற்றி எனக்குக் கற்பிக்கிறார்கள், எதிர்காலத்தில் நாடு எவ்வாறு செல்ல வேண்டும் என்பதற்கான ஒரு திசையை அவர்கள் எனக்குக் காட்டுகிறார்கள். எனவே, நான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

இன்று ஜல்லிக்கட்டில் பங்கேற்ற அனைத்து இளைஞர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளை மத்தியில் ஆளும் நரேந்திர மோதி அரசு புறக்கணிக்கிறதா என செய்தியாளர்களக் கேட்டதற்கு, அரசாங்கம் விவசாயிகளை புறக்கணிப்பது மட்டுமல்ல; அவர்களை அழிக்க சதி செய்து வருகிறது.

புறக்கணிப்பதற்கும் அழிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. மோதி அரசு விவசாயிகளை புறக்கணிக்கவில்லை; அவர்கள் அழிக்க முயற்சிக்கிறது. தங்களின் நண்பர்களில் 2 அல்லது 3 பேருக்கு நன்மை செய்ய விரும்புவதால் விவசாயிகளை அழிக்க முயற்சிக்கின்றனர்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

விவசாயிக்கு சொந்தமானதை 2 அல்லது 3 நண்பர்களுக்கு கொடுக்க விரும்புகிறார்கள். விவசாயியின் நிலத்தை பறிக்க அரசு விரும்புகிறது. விவசாயியின் விளைபொருட்களை அபகரிக்க விரும்புகிறது. அதை பறித்து தங்களின் நண்பர்களுக்கு கொடுக்க அரசு விரும்புகிறது.

மற்றொரு விஷயம் என்னவென்றால், விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கிறார்கள். விவசாயிகளை அடக்கி விட்டு நாடு தொடர்ந்து வளம் பெறும் என்றும் யாராவது நினைத்தால், அவர்கள் நமது வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டும்.

இந்திய விவசாயிகள் பலவீனமாக இருக்கும்போதெல்லாம், இந்தியா பலவீனமாக இருக்கிறது, நான் ஒரு எதிர் கேள்வியைக் கேட்க விரும்புகிறேன், நீங்கள் விவசாயிகளை அடக்குகிறீர்கள், நீங்கள் ஒரு சில தொழில்களுக்கு உதவுகிறீர்கள், கொரோனா வரும்போது, ​​நீங்கள் சாதாரண மக்களுக்கு உதவவில்லை, நீங்கள் பொதுவானவர்களுக்கு ஆதரவளிக்கவில்லை. மோதி-நீங்கள் யாருடைய பிரதமர்? நீங்கள் இந்திய மக்களின் பிரதமரா அல்லது 2-3 தொழிலதிபர்களின் பிரதமரா?

என்னுடைய இறுதி கேள்வி என்னவென்றால், சீனா நம் எல்லைக்குள் என்ன செய்கிறது? சீன மக்கள் ஏன் இந்திய எல்லைக்குள் அமர்ந்திருக்கிறார்கள், இது பற்றி பிரதமரால் ஏன் அவர்களிடம் எதுவும் சொல்ல முடியவில்லை? சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் அமர்ந்திருப்பது குறித்து பிரதமர் ஏன் முற்றிலும் மெளனமாக இருக்கிறார்?

டெல்லியில் போராடும் விவசாயிகளை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். விவசாயிகளை நான் முழுமையாக ஆதரிக்கிறேன், அவர்களுடன் தொடர்ந்து நிற்பேன். நான் அவர்களின் பிரச்னையை பஞ்சாபில் ஒரு யாத்திரையில் எழுப்பினேன், நாங்கள் அதை தொடர்ந்து செய்வோம்.

என் சொற்களைக் குறிக்கவும் - விவசாயிகள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் கட்டாயம் இந்த அரசாங்கத்துக்கு ஏற்படும். நான் இங்கு சொன்னதை நினைவில் கொள்ளுங்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: