கோவேக்சின்: கொரோனா தடுப்பூசிக்கு இந்தியா அவசரகதியில் அனுமதி வழங்கியதாக வல்லுநர்கள் எச்சரிக்கை

பட மூலாதாரம், Getty Images
பரிசோதனைகள் நிறைவடைவதற்கு முன்பே இந்தியா திடீரென அனுமதி வழங்கிய கோவேக்சின் தடுப்பூசி குறித்து நிபுணர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
கோவேக்சின் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு - அஸ்ட்ராசெனிகா நிறுவனத்தின் தடுப்பூசிகளுக்கு, இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி நேற்று (ஜனவரி 3, ஞாயிற்றுக்கிழமை) அனுமதி வழங்கியது.
தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டது இந்தியாவின் நிலையை மாற்றக் கூடியது என தன் ட்விட்டர் பக்கத்தில் வரவேற்றிருந்தார் பிரதமர் நரேந்திர மோதி. ஆனால் நிபுணர்கள் இது அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு என எச்சரிக்கிறார்கள்.
'ஆல் இந்தியா டிரக் ஆக்ஷன் நெட்வொர்க்' (ஏ.ஐ.டி.ஏ.என்) என்ற சுகாதார கண்காணிப்பு அமைப்பு, இந்திய அரசு கோவேக்சினுக்கு அனுமதி வழங்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பதாகக் கூறியிருக்கிறது.
"கோவேக்சினின் செயல் திறன் குறித்த தரவுகள் இல்லாதது வருத்தமளிக்கிறது. மேலும், இதுபோன்று வெளிப்படைத்தன்மை இல்லாதது நிறைய கேள்விகளை உருவாக்கும். இது இந்தியாவின் அறிவியல் சார்ந்த முடிவுகளை எடுக்கும் அமைப்புகளின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்த உதவாது" என்று கருத்துத் தெரிவித்துள்ளது ஏ.ஐ.டி.ஏ.என் அமைப்பு.

கோவேக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் கொரோனாவுக்கு எதிராக நல்ல நோய் எதிர்ப்புத் திறனை வெளிப்படுத்துகிறது என இந்தியாவின் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரி வேணுகோபால் ஜி சோமனி குறிப்பிட்ட பிறகு, ஏ.ஐ.டி.ஏ.என் அமைப்பின் இந்த அறிக்கை வெளியானது.
இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய இந்தியாவின் தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரியான வேணுகோபால் ஜி சோமனி,"கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த கொரோனா தடுப்பூசிகள் 100% பாதுகாப்பானது. மிகச் சிறிய அளவில் பாதுகாப்பு பிரச்சனை இருந்தால் கூட நாங்கள் மருந்தை அனுமதிக்கமாட்டோம். எல்லா தடுப்பூசிகளிலும் காய்ச்சல், வலி மற்றும் சில ஒவ்வாமைகள் இருக்கும். ஆனால், கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்கள் ஆண்மைக் குறைபாட்டால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்பது முற்றிலும் தவறான தகவல்" என்று அவர் கூறினார்.
"முறையாக ஆராய்ச்சி செய்யப்படாத கொரோனா தடுப்பு மருந்துக்கு எந்த அறிவியல் அடிப்படையில் அனுமதி வழங்கியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. கோவேக்சின் மருந்து கொரோனாவின் புதிய திரிபுக்கு எதிராக பயன்படலாம் என்கிற கருத்தை ஆதரிக்கும் தரவுகள் எதுவும் சோதனை முடிவுகளில் இல்லை" என ஏ.ஐ.டி.ஏ.என் அமைப்பு கூறியுள்ளது.
சமூக வலைதளங்களில் இந்த கோவேக்சின் தடுப்பூசி தொடர்பாக நிறைய சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. எதிர்கட்சித் தலைவர்களும் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
நேற்றிரவு, இந்திய ட்விட்டரில் கோவேக்சின் தொடர்பாக கடுமையான விவாதங்கள் நடந்தன. கோவேக்சினுக்கு வழங்கப்பட்டிருக்கும் அனுமதி, கொரோனா தடுப்பு மருந்து அனுமதிக்கு அரசு வெளியிட்டிருக்கும் வழிமுறைகளுக்கே முரணாக இருப்பதாக பலரும் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சசி தரூர், "கோவேக்சின் தடுப்பூசி இன்னும் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையை நிறைவு செய்யவில்லை. எனவே, முன்கூட்டியே அனுமதி கொடுத்திருப்பது ஆபத்தானது. 3ஆம் கட்ட பரிசோதனை முடியும் வரை கோவேக்சின் தடுப்பூசியை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை வலியுறுத்துகிறேன். அதுவரை, கோவிஷீல்டு தடுப்பூசியை பயன்படுத்தலாம்" என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு ட்விட்டரிலேயே பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், "இதுபோன்ற ஒரு முக்கியமான பிரச்சனையை அரசியலாக்குவது ஏற்க முடியாதது, மிகவும் அதிர்ச்சிகரமானது. கொரோனா தடுப்பூசிகளுக்கு அறிவியல் பூர்வமான வழிகாட்டும் நெறிமுறைகளைப் பின்பற்றி, அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதித்ததை சசி தரூர், அகிலேஷ் யாதவ் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் நம்பிக்கையிழக்கச் செய்யக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
இந்தியாவின் திட்டம் என்ன?
இந்தியா இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்துக்குள், முன்னுரிமை அடிப்படையில் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்த திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.
உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகளவில் கொரோனா நோயாளிகளைக் கொண்ட நாடாக இருக்கிறது இந்தியா. இந்தியாவில் 1.03 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறர்கள். சுமாராக 1.5 லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
இந்தியா அனுமதி வழங்கியிருக்கும் இரு கொரோனா தடுப்பூசிகளும் சாதாரண குளிர்சாதனப் பெட்டியின் வெப்பநிலையிலேயே வைத்து விநியோகிக்கலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












