விவசாயிகள் போராட்ட நாள் 19: ஒற்றுமையின்மையால் வலுவிழக்கிறதா போராட்டம்?

பட மூலாதாரம், Getty Images
இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 19ஆம் நாளை எட்டியிருக்கிறது. இதையொட்டி ஏற்கெனவே அறிவித்தபடி கடந்த 12ஆம் தேதி பாரத் பந்த் போராட்டத்தை நடத்திய விவசாயிகள், இன்று மாவட்ட தலைநகரங்களில் முற்றுகை போராட்டம், உண்ணாவிரதம் ஆகியவற்றில் ஈடுபட்டனர்.
எனினும் விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் ஏற்கெனவே கைதாகியுள்ள செயல்பாட்டாளர்களை விடுவிக்க வலியுறுத்தி வரும் பாரதிய கிசான் யூனியன் (ஏக்தா உக்ரஹான்) என்ற அமைப்பு, தற்போதைய உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதில்லை என்ற முடிவை எடுத்தது.
இந்த நிலையில், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேட்டவலம் மணிகண்டன், தெலங்கானா, மகாராஷ்டிரா, பிகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சங்கங்கள் அங்கம் வகிக்கும் அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் இந்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார்கள். அப்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை அவர்கள் அளித்துள்ளதாக அமைச்சர் தோமர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1

X பதிவின் முடிவு, 2
அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் மீதமுள்ள சங்கங்களும் பங்கெடுக்கும் என்று ஹரியாணா மாநில துணை முதலமைச்சர் துஷ்யந்த் செளதாலா நம்பிக்கை தெரிவித்தார்.
இதேவேளை விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். "உண்ணாவிரதம் இருப்பது புனிதமானது. நீங்கள் எங்கிருந்தாலும் நமது விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருங்கள். அவர்களுடைய போராட்டம் வெற்றி பெற உழையுங்கள். கடைசியில் விவசாயிகளே வெல்வார்கள்," என்று கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
டெல்லி சட்டமன்ற சபாநாயகர் ராம்நிவாஸ் கோயலும் சட்டமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக உண்ணாவிரதத்தில் தனியாக ஈடுபட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
இதேவேளை, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவுக்கரம் வழங்கி வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் நடவடிக்கையை "நயவஞ்ச போக்கு" என்று இந்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் சாடியுள்ளார். மூன்று வேளாண் சட்டங்களில் ஒன்றை கடந்த நவம்பர் மாதம் டெல்லி அரசிதழில் வெளியிட்ட அரசு, வேளாண் விளை பொருட்கள் விற்பனை தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்வதாக பஞ்சாப் சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்குறுதி அளிக்கிறது. இப்போது டெல்லி முதல்வர் உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறுவது நயவஞ்ச செயலின்றி வேறில்லை என்று ஜாவடேகர் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
முன்னதாக, திங்கட்கிழமை காலையில் தேசிய நெடுஞ்சாலை-24 அமைந்த டெல்லி - காஸிபூர் பகுதியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால், சுமார் 2 கி.மீ தூரத்துக்கு போக்குவரத்து தடைபட்டது. இதையடுத்து பாரதிய கிசான் யூனியன் நிர்வாகி ராகேஷ் திகாய்த், "எங்களுடைய போராட்டத்தால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம். ஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு முக்கியமானது என்பதை அவர்களுக்கு உணர்த்தவே விரும்புகிறோம்," என்று கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 6
இதைத்தொடர்து சில நிமிட சாலை மறியலுக்குப் பிறகு காவல்துறையினர் கேட்டுக் கொண்டதையடுத்து வாகனங்கள் செல்ல விவசாயிகள் வழியமைத்தனர். இருந்தபோதும், அந்த நெடுஞ்சாலையில் விவசாயிகள் பெருமளவில் குவிந்து வருகிறார்கள்.
பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பாக நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கை கடுமையாக விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 7
"கேப்டன் ஜி, (அமரிந்தர் சிங்) ஆரம்பம் முதல் நான் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்காக நிற்கிறேன். டெல்லி விளையாட்டரங்குகளை தற்காலிக சிறைகளாக மாற்ற நான் அனுமதி தரவில்லை. ஆனால், அமலாக்கத்துறை இயக்குநரகம் தொடர்ந்த வழக்கில் சிக்கியுள்ள உங்களுடைய மகனை காப்பாற்ற மத்திய அரசுடன் சேர்ந்து கொண்டு, விவசாயிகள் இயக்கத்தை தாரை வார்த்து விட்டீர்களே, ஏன்?" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 8
விவசாயிகள் போராட்டம் டெல்லியில் இரு வாரங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், அதில் சுமார் 40 விவசாயிகள் சங்கங்கள் பங்கெடுத்தன. அதன் பிறகு நடந்த மூன்று சுற்று பேச்சுவார்த்தையின்போது அங்கீகரிக்கப்பட்ட விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அரசு பேசியது. ஆனால், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச வேண்டும் என விவசாயிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்ததால் நான்காவது சுற்று பேச்சுவார்த்தையில் கூடுதலாக சில சங்கங்களின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில், ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை நடந்த மறுதினமே, குறிப்பிட்ட சில சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து மத்திய அரசு நேரடியாக சில யோசனைகளை தெரிவித்தது. இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் குறிப்பிட்ட சில சங்கங்களின் நிர்வாகிகளை மட்டும் அழைத்து பேசி மத்திய அரசு முன்மொழிந்த யோசனைகள் அடங்கிய கடிதத்தை அனுப்ப நடவடிக்கை எடுத்தார்.
ஆனால், அந்த யோசனைகளை பெரும்பாலான சங்கங்கள் ஏற்காத நிலையில் திங்கட்கிழமை இந்திய அமைச்சர் நரேநத்திர சிங் தோமரை 10 விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்துப்பேசியிருக்கிறார்கள்.
ஒட்டுமொத்த விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்காமல், தனித்தனியாக ஒரு சிலரிடம் மட்டுமே மத்திய அரசு பேசி வருவது, கூட்டங்களுக்கு அழைக்கப்படாத சங்கங்களின் பிரதிநிதிகள் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி வருகிறது.
இந்தப்பின்னணியில், டெல்லியில் 12ஆம் தேதி பாரத் பந்துக்கு அழைப்பு விடுத்தபோது விவசாயிகள் சங்கங்கள் காட்டிய ஆர்வம், இன்று அழைப்பு விடுத்திருந்த மாவட்ட தலைநகரங்கள் முற்றுகை போராட்டத்தில் காணவில்லை. அதற்கு காரணம், பெரும்பாலான சங்கங்களின் பிரதிநிதிகள் அதற்கு ஆதரவாக இல்லை என்பதுதான் என்று சில விவசாயிகள் சங்கங்கள் கூறியுள்ளன.
இதேவேளை டெல்லி சிங்கு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளில் ஒரு பிரிவினர் சொந்த ஊர்களில் நடக்கும் போராட்டங்களுக்குச்செல்வதாகக் கூறி இரு தினங்களுக்கு முன்பு புறப்பட்டனர். ஆனால், அவ்வாறு சென்றவர்கள் மீண்டும் தலைநகர எல்லைக்குள் நுழைவதில் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருவதாக தகவல்கள் வருகின்றன. இதன் மூலம் டெல்லிக்குள் உள்ள விவசாயிகளை பிளவுபடுத்தி அவர்களின் போராட்டத்தை மத்திய அரசு பலவீனப்படுத்த முயலலாம் என்ற கருத்து விவசாயிகள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
இதற்கிடையே, சட்டக்கல்லூரி மாணவர் ரிஷப் சர்மா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். நெடுஞ்சாலைகளில் போராட்டங்களை நடத்தி வரும் அவர்களை அப்புறப்படுத்த வேண்டும்," என்று அவர் தனது மனுவில் கோரியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, ஏ.எஸ். போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் தலைமையிலான அமர்வு முன்பு வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது.
திமுக அறிவித்துள்ள உண்ணாவிரதம்
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 18ஆம்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் நடத்தப்படும் என்று திமுக கூட்டணி அறிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 9
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "விவசாயிகளை மாவோஸிட்டுகளுடன் தொடர்புபடுத்தி இந்திய அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது கண்டனத்துக்குரியது. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் 18ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் நடத்தப்படும். இதில் திமுக கூட்டணி தலைவர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் விவசாயிகளின் ஆதரவு திமுகவுக்கு கிடைக்கவில்லை என்றும் அக்கட்சி தலைமையிலான கூட்டணி விவசாயிகளை தவறாக வழிநடத்தி வருகிறது என்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல். முருகன் குற்றம்சாட்டினார்.
தமிழ்நாட்டில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி, விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்த பலர் திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் பரவலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: