NEET-JEE தேர்வுகளை தள்ளிவைக்க மோதி அரசு தயங்குவது ஏன்?

பட மூலாதாரம், Hindustan Times/ Getty
ஐடி, பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகளான ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் பற்றி தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், ஆன்மிக தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் ஒலிக்கும் குரல்களைக் கேட்க முடிகிறது.
பல இடங்களில் தேர்வுக்கு ஆயத்தமாகும் மாணவர்கள், வீதிகளில் இறங்கி, தேர்வைத் தள்ளிவைக்கக் கோரி போராடுகிறார்கள். ஆனால், ஜேஇஇ தேர்வு தொடங்க இன்னும் நான்கு நாட்களே எஞ்சியுள்ளன.
கொரோனா பெருந்தொற்று அச்சம் காரணமாக பல மாணவர்கள் செப்டம்பர் மாதம் நடைபெறும் தேர்வில் பங்கெடுக்க தயங்குகிறார்கள். பல இடங்களில் தேர்வு மையத்தை அடைய மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையும் நிலவுகிறது.
வடகிழக்கு மாநிலங்களின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக தொடரந்து போக்குவரத்து வசதிகள் கிடையாது. இதுபோன்ற சூழ்நிலையில், தேசிய அளவில் ஒரே நேரத்தில் நடைபெறும் நீட், ஜேஇஇ தேர்வுகளை தங்களின் பிள்ளைகள் எழுதுவதை பல மாணவர்களின் குடும்பங்கள் விரும்பவில்லை.
அரசின் தற்போதைய முடிவின்படி ஜேஇஇ தேர்வு, வரும் செப்டம்பர் 1 முதல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. நீட் தேர்வு வரும் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுகளுக்காக, நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த தேர்வுகளின் தேதியை தள்ளிவைக்க உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை பல மாணவர்கள் தரப்பு தட்டியபோதும், அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளாததால் இந்த விவகாரத்தில் அரசே முடிவெடுக்கலாம் என்று கூறி விட்டது.
இந்த விவகாரத்தில் ஏழு மாநிலங்களின் அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய தீர்மானித்திருந்தாலும், எஞ்சிய சில நாட்களில் தீர்வு கிடைக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
இதேவேளை, கொரோனா மற்றும் வெள்ள நிலைமை மேம்பட்ட பிறகு இந்த தேர்வை நடத்தலாம் என்று டெல்லி, ஒடிஷா போன்ற மாநிலங்கள் அரசை கேட்டுக் கொண்டுள்ளன.
புதுச்சேரி முதல்வர் கடிதம்
நீட் தேர்வு மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவது தொடர்பாக, காணொளி காட்சி மூலம் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள், ஆளும் மாநில முதல்வர்கள் பங்குபெற்றனர்.
இந்த கூட்டத்திற்குப் பிறகு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஜேஇஇ தேர்வை கொரோனா நோய்த் தொற்று காலம் முடியும் வரை ஒத்திவைக்க வலியுறுத்தியும் பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த விவகாரத்தில் பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ள டிவிட்டர் தகவலில், 11 முதல்வர்கள் நீட், ஜேஇஇ தேர்வுகளை எதிர்க்கிறார்கள் என்றால், நீதிமன்றத்துக்கு அவர்கள் செல்ல வேணடிய அவசியம் என்ன? முதல்வர்களுக்கு அதிகாரம் இல்லையா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இதேவேளை, தமிழக அரசு சார்பில் இந்த விவகாரத்தில் ஏற்கெனவே பிரதமர் மோதிக்கு கடிதம் எழுதியிருப்பதாக மாநில முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு இது குறித்து முதல்வர் பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "கொரோனா காலத்தில், நீட் தேர்வை ஒத்தி வைப்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு" என்று பதிலளித்தார்.
இதையடுத்து, ஏழு மாநில முதல்வர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இருக்கிறார்களே என கேட்டபோது, "நாங்களும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பிரதமருக்குக் கடிதம் கொடுத்துள்ளோம். அவர் தான் இதை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு அவரிடம் தான் இருக்கிறது," என்று கூறினார் பழனிச்சாமி.
ஆனாலும், மாநில அரசின் நடவடிக்கையால் சமாதானம் அடையாத தமிழக எதிர்கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள், நீட் தேர்வை நடத்த தேவையில்லை என்று திட்டவிட்டமாக மத்திய அரசிடம் தமிழக அரசு தயங்குவது ஏன் என்று அவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

பட மூலாதாரம், TNDIPR
ஆனால், தமிழக முதல்வரின் இந்த விளக்கம் சம்பிரதாயமானது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இதேபோல, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும், தன் முடிவுகளால் அரசு இன்றைய தலைமுறையை அலட்சியப் படுத்துவது என்பதே கடும் விமர்சனத்துக்குரிய தவறு. நாளையை ஆளப்போகும் மாணவர்களின் மனநிலை புரியாமல், முடிவுகள் எடுப்பது மன்னிக்க முடியாத குற்றம். நுழைவுத் தேர்வை ஒத்தி வைப்பதே சரியான முடிவு என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
மறுபுறம், கல்வியுடன் தொடர்புடைய நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100 கல்வியாளர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, செப்டம்பர் மாதம் ஜேஇஇ-நீட் நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

ஆனால் தேர்வுகளின் தேதியை ஒத்திவைக்காததன் பின்னணியில் அரசாங்கத்திற்கு அதன் சொந்த காரணம் உள்ளது.
பொதுவாக ஜேஇஇ அமர்வு ஆகஸ்ட் முதல் தொடங்குகிறது. ஆனால் இந்த முறை கொரோனா காரணமாக அவ்வாறு அமையவில்லை.
மாற்றுத்தேதியில் ஜேஇஇ தேர்வை நடத்தினால், எத்தகைய பிரச்னைகள் ஏற்படும் என்பதை டெல்லி ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.ராமுகோபால் ராவ் தனது பேஸ்புக் இடுகையில் எழுதியிருக்கிறார்.
அவரைப் பொருத்தவரை, செப்டம்பரில் பரீட்சை ஏற்பாடு செய்தபின், ஜேஇஇ மேம்பட்ட தேர்வு நடைபெறும். அதன் பிறகும், முடிவுகளின் முடிவும், ஆலோசனை செயல்முறைக்கு ஒன்றரை முதல் இரண்டு மாதங்களும் ஆகும்.
அத்தகைய சூழ்நிலையில், இந்த ஆண்டு அமர்வு நவம்பருக்கு முன் தொடங்க முடியாது. அதாவது, ஏற்கனவே மூன்று மாதங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த தேர்வுகளின் தேதிகள், செப்டம்பர் மாதத்துக்குப் பிறகும் நீட்டிக்கப்படுமானால், 2021 ஆம் ஆண்டின் முதல் அமர்வைத் தொடங்க முடியாது. ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு ஆண்டுக்கு பல முறை எப்படியும் நடத்தப்படுகிறது. எனவே நேரம் வழங்க முடியாத மாணவர்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தேர்வை எழுதலாம் என்பது பேராசிரியர் ராமுகோபால் ராவின் அறிவுரை.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் செப்டம்பர் தாண்டி தேர்வுத்தேதி நீட்டிக்கப்பட்டால், முழு செமஸ்டரின் முறையும் மாறும். இது இந்த ஆண்டு மட்டுமின்றி வரும் ஆண்டு அமர்வின் மாணவர்களையும் பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அத்தகைய சூழ்நிலையில், அமர்வு மோசமாக இருக்காது மற்றும் அதற்கு தயாரான மாணவர்கள், அந்த தேர்வில் அமரலாம், அவர்களின் ஆண்டு வீணாகாது.
எனவே, இந்த ஆண்டு நவம்பரில் அமர்வைத் தொடங்க அரசாங்கம் முயற்சிக்கிறது. அதன்பிறகு, விடுமுறை நாட்களைக் குறைப்பதன் மூலமும், பாடத்திட்டங்களைக் குறைப்பதன் மூலமும், ஆகஸ்ட் 2021-க்குள் இரண்டு செமஸ்டர்களை முடிக்கவும், இதனால் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை சரியான நேரத்தில் நடத்தலாம் என்பது அரசின் திட்டம்.
இதே தர்க்கம் நீட் மாணவர்களுக்கும் பொருந்தும்.
தேசிய தேர்வு முகமை (என்டிஏ)தான் ஐஐடி மற்றும் நீட் தேர்வுகளை நடத்தும் அதிகாரப்பூர்வ அமைப்பு.
இதில், நீட் தேர்வு நடத்தும் நிறுவனம்வசம், யுஜிசி நெட், சிஎம்ஏடி, ஜிபிஏடி மற்றும் பல தேர்வுகளை நாட்டில் நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த என்டிஏ அதன் சொந்த அட்டவணைப்படி தேர்வுகளுக்கான பணிகளை மேற்கொள்கிறது.
ஐஐடி மற்றும் நீட் தேர்வுகள் என எடுத்துக் கொண்டால், தேர்வு நடத்தும் நடைமுறைகளான மாநில அரசுகளிடமிருந்து பாதுகாப்பு, விடைத்தாள், வினாத்தாள் தயாரித்தல், தேர்வு மைய நிர்ணயம், தாள்கள் மையங்களை அடைதல், வினாத்தாள், விடைத்தாள் கசிவை தடுப்பது என பல கட்ட நடவடிக்கைகள் இதில் அடங்கியுள்ளன.

பட மூலாதாரம், Reuters
இந்த மொத்த செயல்முறைக்கும் அந்த நிறுவனத்துக்கு 80 முதல் 90 நாட்கள் வரை ஆகும்.
இதுபோன்ற நிலையில், தேர்வுகளின் தேதி இந்த முறை மீண்டும் நீட்டிக்கப்பட்டால், கடந்த 90 நாட்களாக அந்த நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கை, அவற்றின் ஊழியர்களின் உழைப்பு வீணாகி விடும் என்பது அரசின் வாதம். தேர்வுகள் தாமதமானால், அது இரண்டாவது தேர்வு ஏற்பாடுகளை செய்வதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசு கருதுகிறது.
திருவிழா நேரம்
இது தவிர, திருவிழா காலம் செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் தொடங்கும் என்பதும் மத்திய அரசின் தர்க்கமாகும். தசரா, தீபாவளி, சத் பூஜை, பய்யா தூஜ், கிறிஸ்துமஸ் என பல நிகழ்வுகளை கவனத்தில் கொள்ள வேண்டும். இதை கல்விச் செயலாளர் அமித் கரே ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இதுபோன்ற சூழ்நிலையில், செப்டம்பர் 26 க்குப் பிறகு வடகிழக்கு இந்தியாவில் மீண்டும் தேர்வு நடத்த ஆசிரியர்களை நியமிப்பது கடினமான பணியாக அமையும்.
இது தவிர, தேர்வு மையத்தைத் தேர்ந்தெடுப்பதிலும் சிக்கல்கள் ஏற்படக்கூடும். பிஹார் போன்ற மாநிலத்தில், சட்டமன்ற தேர்தல் ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. வழக்கமாக தேர்தல் பணிகளில் அங்கு ஆசிரியர்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுவார்கள். இதுவும் ஒரு முக்கிய பிரச்னை.
எப்படியிருந்தாலும், இந்த தேர்வுகளின் தேதிகள் ஏற்கெனவே ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் மாற்றப்பட்டுள்ளன.
சில மாணவர்கள் தேர்வு செப்டம்பர் மாதம் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
அந்த ஏப்ரல் தேர்வுக்காக ஏற்கெனவே மாணவர்கள் ஒரு வருடத்துக்கு முன்பே தயாராகியிருப்பார்கள். அதாவது, மாணவர்கள் 2019 முதல் 2020 தேர்வுக்குத் தயாராகி வருவார்கள். இப்போது மீண்டும் தேர்வு தள்ளிவைக்கப்பட்டால், தங்களின் ஒரு வருட பயிற்சி போல மீண்டும் நேரம் ஒதுக்க வேண்டும். அது மாணவர்களுக்கு வித்தியாசமான மன அழுத்தத்தை தரும் என்றும் அஞ்சப்படுகிறது.
சமீபத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த இந்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், பல மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பிரதிநிதிகள் குழு அவரைச் சந்திக்க வந்ததாகவும், அவர்கள் தேர்வை மேலும் ஒத்திவைக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இது மட்டுமின்றி, ஐஐடி மற்றும் நீட் தேர்வுகளுக்கான அட்மிட் கார்டுகளை லட்சக்கணக்கான மாணவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்று வாதிடும் மத்திய அரசு, 85 சதவீத மாணவர்கள் அவ்வாறு அட்மிட் கார்டுகளை பதிவிறக்கம் செய்திருப்பதே தேர்வை எழுத அவர்கள் தெரிவித்துள்ள ஒப்புகை என்றே கருத வேண்டும் என்று கூறுகிறது.
இதுபோன்ற சூழ்நிலைகளால்தான், கொரோனா காலத்தில் வெவ்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை கையாண்டு எப்படியாவது தேர்வை நடத்தி விட வேண்டும் என்பதில் அரசு உறுதிகாட்டுவதாக அரசுத்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த தேர்வில் 80 முதல் 90 சதவீதம் பேர் பங்கேற்றால் அதுவே தனக்கு கிடைத்த வெற்றி என்று அவர்கள் நம்புகிறார்கள்.
பிற செய்திகள்:
- நரேந்திர மோதி அரசுக்கு வலுவில்லையா? சீன நாளிதழ் ஆய்வு வெளியிடும் ஆச்சரியமூட்டும் தகவல்கள்
- இலங்கை போரில் மக்களை கொன்றதா ராணுவம்? எரிக் சொல்ஹெய்ம் கருத்தை நிராகரித்தது இலங்கை அரசு
- சுஷாந்த் சிங் மரணம்: சிபிஐ விசாரணைக்கு முன்பாக மனம் திறக்கும் ரியா சக்ரபர்த்தி - காரணம் என்ன?
- ஐ.பி.எல் 2020: முதல் போட்டியில் சென்னை - மும்பை மோதலா? போட்டியில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












