பாஜகவினரின் வெறுப்புணர்வு பேச்சுகள்: என்ன சொல்கிறது ஃபேஸ்புக்?

ராகுல் காந்தி Vs ரவிசங்கர் பிரசாத்: வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்துகிறதா?

பட மூலாதாரம், FACEBOOK

இந்தியாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியினரின் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளை ஃபேஸ்புக் நிறுவனம் கண்டுகொள்ளவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் பதில் அளித்துள்ளது.

வன்முறையைத் தூண்டும் வெறுப்புணர்வு பேச்சு மற்றும் அதன் உள்ளடக்க கருத்துகளை எங்கள் தளங்களில் நாங்கள் தடைசெய்கிறோம், எங்களின் இந்த கொள்கைகளை, யாருடைய அரசியல் நிலைப்பாடு அல்லது கட்சி இணைப்பை பொருட்படுத்தாமல் உலகளவில் செயல்படுத்துகிறோம். இதில் செயலாற்ற வேண்டிய பல விஷயங்கள் இன்னும் உள்ளன என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால், நாங்கள் அதன் அமலாக்கத்தில் முன்னேற்றம் கண்டு வருகிறோம். மேலும் எங்களுடைய நடைமுறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியமான செயல்பாட்டை உறுதிப்படுத்த முறையாக தணிக்கை செய்கிறோம் என்று ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

முன்னதாக, இந்தியாவில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துவதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

இதற்கு பாஜக மூத்த தலைவரும் , மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் பதில் கூறியிருந்தார்.

பாஜக கட்சிக்கு ஆதரவாக ஃபேஸ்புக் நிறுவனம் செயல்படுவதாகவும், அக்கட்சியின் உறுப்பினர்கள் பதிவிடும் வெறுப்பு பேச்சுக்களை அந்நிறுவனம் நீக்குவது இல்லை என்றும் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.

வால் ஸ்ட்ரீட் ர்னல் கூறுவது என்ன?

வன்முறையை தூண்டும் விதத்தில் பதிவிட்ட மற்றும் வன்முறைகளில் பங்கேற்ற பயனாளர்களின் கணக்குகுகளை தடை செய்வதை ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்தியாவில் இருக்கும் அதிகாரிகளில் ஒருவரான அங்கி தாஸ் என்பவரின் தலையீட்டால் தடுக்கப்பட்டது என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் ஊழியர்களை மேற்கோள்காட்டி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிடுகின்றனர் எனக் குற்றம்சாட்டி டெல்லியின் சைபர் செல் பிரிவில் இந்தியா, தெற்கு மற்றும் மத்திய ஆசிய பேஸ் புக் நிறுவனத்தின் பொதுக்கொள்கை இயக்குநர் அங்கி தாஸ் புகார் அளித்துள்ளார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில், பா.ஜ.க தலைவர் டி.ராஜா சிங், ரோஹிஞ்சா முஸ்லிம்களாகக் குடியேறியவர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும். முஸ்லிம்கள் துரோகிகள் என்று அழைக்கப்பட வேண்டும். அவர்களின் மசூதிகளை இடிக்கவேண்டும் என ஃபேஸ்புக் பதிவுகள் மற்றும் பொதுமேடைகளில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுக்கத்தக்கப் பேச்சுக்களைப் பேசி அச்சுறுத்தி வந்தார்.

படுமோசமான பிரிவினை வாத பேச்சுக்களை பேசும் டி.ராஜா சிங் பேச்சு பதிவுகளையும், அவரது முகநூல் கணக்கை நீக்க ஃபேஸ்புக் நிறுவனம் தவறியதாக வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் (Wall Street Journal) குற்றம் சாட்டியுள்ளது.

அதேபோல், பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் அனந்த்குமார் ஹெக்டே தனது ஃபேஸ்புக் பதிவில், "கொரோனா ஜிஹாத்" என்ற சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும். முஸ்லிம்கள் நாட்டில் கொரோனா வைரஸ் பரப்புவதாகக் குற்றம் சாட்டியிருந்தனர்.

ராகுல் காந்தி Vs ரவிசங்கர் பிரசாத்: வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்துகிறதா?

பட மூலாதாரம், Getty Images

வன்முறை பதிவுகளை ஃபேஸ்புக் நீக்கத் தவறியதாகவும், அவற்றைப் பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் புறக்கணிப்பதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஃபேஸ்புக் கூறும் பதில் என்ன?

பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங் ஆபத்தான பயணாளி என்று ஃபேஸ்புக்கில் அடையாளப்படுத்தப்பட்டால் அதனால் வரும் மோசமான அரசியல் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அங்கி தாஸ் எச்சரிக்கை விடுத்தார் என்று ஃபேஸ்புக்கின் செய்தித்தொடர்பாளர் ஆன்டி ஸ்ட்டோன் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் ராஜா சிங்கை ஃபேஸ்புக்கை பயன்படுத்துவதில் இருந்து தடை செய்யாமல் இருப்பதற்கு அங்கி தாஸ் எதிர்த்தது மட்டுமே காரணமல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும் அவரை தடை செய்வது குறித்து ஃபேஸ்புக் பரிசீலித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

அங்கி தாஸ், ராஜா சிங் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தரப்பினர் ஆகியோர் தங்களுடைய கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் அலுவலகம் இதுகுறித்து கருத்து வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளதாக அந்த செய்தித்தாள் கூறுகிறது.

ராகுல் காந்தி Vs ரவிசங்கர் பிரசாத்: வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்துகிறதா?

பட மூலாதாரம், Twitter/ @RahulGandhi

இதனை மேற்கோள் காட்டி, ''இந்தியாவில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது. சமூக வலைதளங்களில் போலி செய்திகளைப் பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. ஃபேஸ்புக்கின் உண்மை நிலையை அமெரிக்க ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன'' என்று ட்விட்டரில் ராகுல் காந்தி பதிவிட்டு இருந்தார்.

ராகுல் காந்தி Vs ரவிசங்கர் பிரசாத்: வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்துகிறதா?

பட மூலாதாரம், Twitter/ @rprasad

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ரவிசங்கர் பிரசாத், தனது ட்விட்டர் பதிவில் "மக்களிடம் மட்டுமல்லாமல் சொந்த கட்சியினரிடம் கூட தோற்றுப்போனவர்கள், மொத்த உலகத்தையும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸால் கட்டுப்படுத்தப்படுவதாக கூச்சலிடுகிறார்கள். நீங்கள் கேம்பிரிட்ஜ் அனலிடிகா விஷயத்தில் கையும் களவுமாகச் சிக்கினீர்கள்," என்று பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: