தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது - இன்றைய நிலவரம் என்ன?

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் புதிதாக 6,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,504 பேர் குணமடைந்துள்ளனர். 88 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 6785 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 1,299 பேருக்கும் விருதுநகரில் 424 பேருக்கும் செங்கல்பட்டில் 419 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 349 பேருக்கும் கன்னியாகுமரியில் 266 பேருக்கும் மதுரையில் 326 பேருக்கும் ராணிப்பேட்டையில் 222 பேருக்கும் தேனியில் 234 பேருக்கும் திருவள்ளூரில் 378 பேருக்கும் தூத்துக்குடியில் 313 பேருக்கும் திருச்சியில் 217 பேருக்கும் விருதுநகரில் 424 பேருக்கும் புதிதாக தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

இன்று உயிரிழந்த 88 பேரில் 22 பேர் தனியார் மருத்துவமனையிலும் 66 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 88 பேரில் 82 பேர் இணை நோய்களாக உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். 6 பேர் கொரோனா தவிர்த்த வேறு நோய்களால் பாதிக்கப்படாதவர்கள். மாநிலத்தில் இதுவரை இந்நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,320ஆக உள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,99,749ஆக உள்ளது. இதில் தற்போது சிகிச்சையில் உள்ள ஆக்டிவ் நோயாளிகளாக 53,132 பேர் உள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 22,23,019 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: