திருப்பதியில் லட்டு செய்வோர் உள்பட 140 பேருக்கு கொரோனா தொற்று

பட மூலாதாரம், Getty Images
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - திருப்பதி கோயில் ஊழியர்களுக்கு கொரோனாவைரஸ்
ஜூன் 11ஆம் தேதி முதல் தற்போது வரை, திருப்பதி கோயிலில் பணிபுரியும் 140 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 14 பேர் உதவி பூசாரிகள், 56 பேர் பாதுகாப்பு பணியாளர்கள், மற்றும் 16 பேர் லட்டு தயாரிக்கும் சமையல் கூட்டத்தில் பணியாற்றுபவர்கள். பிறர் தேவஸ்தானத்தின் வெவ்வேறு பிரிவுகளில் பணியாற்றுகிறார்கள்.
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 140 பேரில் 70 பேர் குணம் அடைந்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினத்தந்தி - தப்பியோடிய கைதி பிடிபட்டார்
புதுக்கோட்டையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி தப்பியோடிய ராஜா பிடிபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது என்கிறது தினத்தந்தி செய்தி.
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏழு வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த ராஜா என்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக போலீசார் குற்றவாளி ராஜாவை வாகனத்தில் அழைத்து வந்தபோது மருத்துவமனையில் இருந்து அவர் தப்பி ஓடினார்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

தப்பி ஓடிய ராஜா முள்ளூர் காட்டுப்பகுதியில் பிடிபட்டதாக காவல்துறை தற்போது தெரிவித்துள்ளது.
போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதி ராஜா தப்பி ஓடிய விவகாரத்தில் காவலர்கள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்து தமிழ் திசை - செப்டம்பர் மாதத்துக்குள் 35 லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போதுள்ள நிலவரத்தைவிட மோசமாகச் சென்றால் செப்டம்பர் மாதத்துக்குள் 35 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்சி) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், நாட்டில் கொரோனாவுக்குச் சிகிச்சை எடுத்து வருவோர் எண்ணிக்கை 10 லட்சமாக இருக்கும் என்றும் ஐஐஎஸ்சி தெரிவித்துள்ளது.
வாரத்துக்கு 2 அல்லது 3 நாட்கள் முடக்கநிலை கொண்டுவருதல், அந்த நாட்களில் முழுமையாக மக்களை வெளியேவரவிடாமல் தடுத்தல் மூலம் கொரோனா சங்கிலியை உடைக்க முடியும் எனவும் ஐஐஎஸ்சி பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்:
- பேரண்டம் உருவானதன் ரகசியம் என்ன? புதுவகை அணுத் துகள் கண்டுபிடிப்பு விடை சொல்லுமா?
- விளைநிலத்தில் இருந்து போலீசாரால் அடித்து விரட்டப்பட்ட தலித் தம்பதியர் தற்கொலை முயற்சி - வைரலான காணொளி
- மஞ்சளின் மகிமையை நூறாண்டுகளுக்கு முன்பே அறிந்த இந்தியர்கள்
- பிட்காயின் மோசடி: ஹேக் செய்யப்பட்ட பில்கேட்ஸ், ஒபாமா ட்விட்டர் கணக்குகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












