சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் இன்று புதிதாக 477 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதால், மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்புவர்களுக்கு நோய் தொற்று இருப்பதால், தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இன்று புதிதாக பாதிக்கப்பட்ட 477 நபர்களில் 93 நபர்கள் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் என்றார். அதனால் சிவகங்கை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் புதிதாக தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அமைச்சர் கூறினார். குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்புபவர்களை உடனடியாக சோதனை செய்து, அவர்களை தனிமைப்படுத்துவதால் நோய் தொற்று பரவுவது குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
இதுவரை 10 விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து பலர் தமிழகம் திரும்பியுள்ளனர் என்றும் அவர்களை தனிமைப்படுத்தி, நோய் தொற்று இல்லை என உறுதியாகிய பின்னர்தான் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

இன்று ஒரே நாளில் மூன்று நபர்கள் இறந்துள்ளதால், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது. இன்று இறந்தவர்கள் அனைவருமே 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்றும் மூன்று நபர்களும் சர்க்கரை நோய் உள்ளிட்ட நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என அமைச்சர் தெரிவித்தார்.
இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 939 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,538ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
மாவட்ட வாரியான பட்டியலில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாக தொடர்ந்து சென்னை இடம்பெற்று வருகிறது. இன்று பாதிக்கப்பட்டதாக அறியப்பட்ட 477 நபர்களில் சென்னை நகரத்தில் 332 நபர்கள் உள்ளனர்.
அதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,278 ஆக உயர்ந்துள்ளது என்றார்.
அதே நேரத்தில், குறைவான பாதிப்புள்ள மாவட்டங்கள் மற்றும் புதிதாக நோய் தொற்று பதிவாகாத மாவட்டங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஈரோட்டில் 31 நாட்களாகவும், திருப்பூரில் 15 நாட்களாகவும், கோவையில் 13 நாட்களாகவும் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












