தமிழகத்தில் கொரோனா வைரஸ்: மேலும் 66 பேர் பாதிப்பு; எண்ணிக்கை 1821 ஆனது

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில், சனிக்கிழமையன்று புதிதாக 66 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1821ஆக உயர்ந்துள்ளது.
சமீப காலங்களில், தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்து வீடுதிரும்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக குறிப்பிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் குணமடைந்தவர்களின் சதவீதம் 52ஆக உள்ளது என தெரிவித்தார்.
இன்று (ஏப்ரல்25) 94 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் இதில் எட்டு நபர்கள் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் ஒரு செவிலியர் ஆவர் என்றார் விஜயபாஸ்கர்.
இதுவரை 960 நபர்கள் குணமடைந்துவிட்டதாகவும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
சென்னையில்பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவது குறித்து பேசிய அமைச்சர், ''சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. சுமார் ஒன்றரை கோடி மக்கள் இருக்கிறார்கள். இங்கு நோய் பரவலுக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. பரவலை கட்டுப்படுத்த மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகளின்படி, ஊரடங்கு தீவிரப்படுத்தபட்டுள்ளது,'' என்றார்.

ஒரே நாளில் அதிகபட்சமாக 7077 மாதிரிகள் இன்று (ஏப்ரல் 25) சோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் இதுவரை 80,110 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். மேலும் சோதனை செய்யும் மாதிரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, ஒரு நாளில் சுமார் 10,000 மாதிரிகள் சோதனை செய்யவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா காலத்தில் பணியாற்றும் காவல துறையினர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஜிங் மாத்திரைகள் அளிக்கப்படுவதோடு கபாசூரக்குடிநீர் அளிக்கப்படுகின்றது என்றார். கபசுரக்குடிநீர் தயாரிப்பதற்காக அரசு நிறுவனமான டாம்கால் நிறுவனத்திற்கு மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மாவட்ட வாரியான நிலவரம் என்ன?

பிற செய்திகள்:
- பொது இடத்தில் சாட்டையடி - தண்டனையை கைவிடும் சௌதி அரேபியா
- அண்டார்டிக்காவில் உள்ள உலகின் மிக பெரிய பனிப்பாறை உடையப்போகிறதா?
- கடும் நெருக்கடியில் வங்கதேச ஆடை தயாரிப்புத்துறை - 20 லட்சம் பேருக்கு வேலை இழப்பா?
- தமிழ்நாட்டில் மேலும் 72 பேருக்குக் கொரோனா தொற்று
- கொரோனா வைரஸ்: ‘மலேசியா இனி உச்சத்தை அடைய வாய்ப்பில்லை’; சிங்கப்பூர் நிலவரம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












