கொரோனா வைரஸ்: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000-ஐ தாண்டியது

கொரோனா தொற்று பாதுகாப்பு

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 693 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறிப்பட்டது. இதனால் திங்கள் மாலை வரை இந்தியாவில் 4067 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1445 பேர் தப்லீக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள். மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 76 சதவீத பேர் ஆண்கள் மற்றும் 24 சதவீத பெண்கள் என சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் நடந்த உயிரிழப்புகள்

இதுவரை இந்தியாவில் 109 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 63 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்; 30 சதவீதம் பேர் 40லிருந்து 60 வயதுக்குட்பட்டவர்கள் மேலும் 7 சதவீதம் பேர் 40 வயதுக்கு குறைந்தவர்கள் என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

நாடு முழுவதும் உணவு தானியங்கள் விநியோகம்

"கடந்த 13 நாட்களில் இந்திய ரயில்வே மூலமாக சர்க்கரை , உப்பு, எண்ணெய் ஆகியவை இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது," என லாவ் அகர்வால் கூறியுள்ளார்.

Banner image reading 'more about coronavirus'

மேலும், "முடக்கத்தின்போது 16.94 லட்சம் மெட்ரிக் டன் தானியங்கள் இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. 13 மாநிலங்களுக்கு 13 லட்சம் மெட்ரிக் டன்கள் கோதுமை மற்றும் 8 மாநிலங்களுக்கு 1.32 லட்சம் மெட்ரிக் டன்களும் விநியோகிக்கப்படும்," என சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர் சந்திப்பின் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர்களுடம் பிரதமர் மோதி சந்திப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்று வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலமாக மத்திய அமைச்சர்களை சந்தித்தார்

முடக்கம் முடிந்தவுடன் எடுக்க வேண்டிய 10 முக்கிய முடிவுகள் மற்றும் 10 முக்கிய கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை பட்டியலிடுமாறு மத்திய அமைச்சர்களிடம் கேட்டுக்கொண்டார்.

கொரோனா வைரஸ்

சானிடைசர்கள் தெளிக்கும் ட்ரோன்கள்

லக்னோவை சேர்ந்த மிலிந்த் ராஜ் என்பவர் சானிடைசர்களை தெளிக்க பிரத்யேக ட்ரோனை தயாரித்துள்ளார். இது 7 முதல் 8 லிட்டர் சானிடிசர்களை சுமந்து செல்லும் மேலும் இதை டிரான்ஸ்மிட்டர், மொபைல் மற்றும் கணினி மூலம் இயக்கலாம் எனக் கூறியுள்ளார். மேலும் 30 லிட்டர் சானிடைசர்களை சுமந்து செல்லும் ட்ரோனை தயார் செய்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

கேரளாவில் வீடு தேடி வரும் பணம்

கேரளா மாநிலத்தில் முடக்கத்தின்போது மக்களுக்கு பணம் தேவைப்பட்டால் அஞ்சல் அலுவலகத்தின் உதவியுடன் அவர்கள் வீட்டிற்கு பணம் கொண்டு சேர்க்கப்படும். அவர்கள் ஏடிஎம் அல்லது வங்கிகளுக்கு செல்ல வேண்டாம் என அரசு கூறியுள்ளது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: