கொரோனா வைரஸ்: நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது? - மத்திய அரசு விளக்கம்

கொரோனா வைரஸ்: பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது? - மத்திய அரசு விளக்கம்

பட மூலாதாரம், Getty Images

தினத்தந்தி: கொரோனா வைரஸ்: பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது? - மத்திய அரசு விளக்கம்

ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு, நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா? என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த மாதம் 24-ந் தேதி நள்ளிரவில் இருந்து ஊரடங்கு அமலுக்கு வந்ததால், பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.

தற்போது, ஆன்லைன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 21 நாள் ஊரடங்கு, வருகிற 14-ந் தேதி முடிவடைகிறது. ஊரடங்கை நீட்டிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று மத்திய அரசு ஏற்கனவே கூறியுள்ளது.

எனவே, 14-ந் தேதிக்கு பிறகு, பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு மத்திய அரசு நேற்று விளக்கம் அளித்தது.

இதுபற்றி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் கூறியதாவது:-

இந்தியாவில், 34 கோடி மாணவர்கள் உள்ளனர். இது, அமெரிக்க மக்கள்தொகையை விட அதிகம். அவர்கள் எங்களின் மிகப்பெரிய சொத்து.

கொரோனா வைரஸ்: பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது? - மத்திய அரசு விளக்கம்

பட மூலாதாரம், Getty Images

எப்போது முடிவு?

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு, மத்திய அரசுக்கு மிகவும் முக்கியம். 14-ந் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது பற்றி இப்போது எந்த முடிவும் எடுக்க முடியாது.

14-ந் தேதியன்று, அப்போதைய கொரோனா நிலவரத்தை ஆய்வு செய்வோம். பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பதா அல்லது மேலும் சில நாட்களுக்கு மூடுவதா என்பது குறித்து 14-ந் தேதி முடிவு செய்யப்படும்.

ஒருவேளை, 14-ந் தேதிக்கு பிறகும் பள்ளி, கல்லூரிகளை தொடர்ந்து மூடுவதாக இருந்தால், மாணவர்களின் கல்வியாண்டில் இழப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய முயன்று வருகிறோம். ஏற்கனவே ஆன்லைனில் பாடங் கள் நடத்தப்படுகின்றன.

பள்ளி, கல்லூரிகள் பின்பற்றி வரும் செயல் திட்டத்தை எனது அமைச்சகம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. நிலைமை சீரடைந்து, ஊரடங்கு விலக்கப்பட்டவுடன், நிலுவையில் உள்ள தேர்வுகளை நடத்துவது, விடைத்தாள்கள் திருத்துவது ஆகிய பணிகளுக்கான திட்டம் தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்

17656

மொத்தம்

2842

குணமடைந்தவர்கள்

559

இறந்தவர்கள்

தகவல்: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட நேரம்: 11: 30 IST

தினமணி: படேல் சிலை விற்பனைக்கா? ஓஎல்எக்ஸ் விளம்பரத்தால் பரபரப்பு, புகார்

படேல் சிலை விற்பனைக்கா? ஓஎல்எக்ஸ் விளம்பரத்தால் பரபரப்பு, புகார்

பட மூலாதாரம், Facebook

ஒற்றுமைச் சிலை என்றழைக்கப்படும் உலகின் மிக உயரமான சிலையான "சர்தார் வல்லபபாய் படேல் சிலை விற்பனைக்காக" என்று ஓஎல்எக்ஸ் ஆன்லைன் வணிக இணையதளத்தில் வந்த விளம்பரத்தால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. எனினும், பின்னர் இந்த விளம்பரத்தை ஓஎல்எக்ஸ் நிறுவனம் அகற்றிவிட்டது.

குஜராத்தில் வல்லபபாய் படேல் நினைவாக அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை முழுவதும் இரும்பால் செய்யப்பட்டது. பெருமளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதாக இருக்கிறது.

கரோனா வைரஸுக்கான மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் வாங்குவதற்கு நன்கொடையாக வழங்குவதற்காக ரூ. 30 ஆயிரம் கோடிக்கு படேல் சிலை விற்பனைக்கு இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

இந்த விளம்பரத்தில் "அவசரம்! ஒற்றுமைச் சிலை விற்பனைக்கு. மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கான அவசரப் பணத் தேவைக்காக" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

உள்ளூர் செய்தித்தாளொன்றில் இதுபற்றி செய்தி வெளியானதைத் தொடர்ந்து, காவல்துறையிடம் ஒற்றுமைச் சிலை வளாக நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை புகார் செய்துள்ளனர்.

இதுபற்றித் தெரியவந்ததும் இந்த விளம்பரத்தை ஓஎல்எக்ஸ் நிர்வாகம் அகற்றிவிட்டது.

காவல்துறையினர் வழக்குப் பதிந்து, விஷமத்தனமாக இவ்வாறு விளம்பரம் செய்த நபரைத் தேடி வருகின்றனர்.

Presentational grey line
Banner image reading 'more about coronavirus'
Banner

இந்து தமிழ் திசை: குளிர்பானத்தில் வார்னிஷை கலந்து குடித்து 3 பேர் உயிரிழப்பு

குளிர்பானத்தில் வார்னிஷை கலந்து குடித்து 3 பேர் உயிரிழப்பு

பட மூலாதாரம், இந்து தமிழ் திசை

மது கிடைக்காததால், மரத்தில் பூசப் பயன்படுத்தும் வார் னிஷை குளிர்பானத்தில் கலந்து குடித்த கார் ஓட்டுநர் உள் ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா தடுப்பு நடவடிக் கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருந்தகங்கள், உணவகங்கள், மளிகை, காய்கறி கடைகள் உள் ளிட்டவை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

மது கிடைக்காததால் சிலர் குளிர்பானத்தில் எரிசாராயம் உள்ளிட்டவற்றைக் கலந்து குடித்து உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற சம்பவம் செங்கல்பட்டிலும் நிகழ்ந்துள்ளது.

செங்கல்பட்டில் ரயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் சிவசங்கர் (32), சிங்கபெருமாள் கோயில், திருத்தேரி பகுதியை சேர்ந்தவர் பிரதீப்(32) இவர் கள் இருவரும் செங்கல்பட்டு அருகே உள்ள ஒத்திவாக்கம் பகுதியில் கேட் கீப்பராக வேலை செய்து வந்தனர். படப்பை அருகே கரசங்கால் பகுதியை சேர்ந்த சிவராமன் (30) கார் ஓட்டுநர். இவர்கள் 3 பேரும் நண்பர்கள்; தினமும் மது குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள். மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் இவர்கள் அவற்றைக் கள்ளச் சந்தையில் வாங்கி குடித்து வந்தனர்.

போலீஸாரின் கெடுபிடி காரணமாக கள்ளச் சந்தையிலும் மது கிடைக்கவில்லை.

இந்நிலையில், மதுவுக்கு அடிமையான இம்மூவரும் செங்கல்பட்டு ரயில்வே குடி யிருப்பு பகுதியில் உள்ள காலி மைதானத்தில் நேற்று இரவு அமர்ந்து, மரத்தில் பூசப் பயன் படுத்தப்படும் வார்னிஷ் திரவத்தில் குளிர்பானத்தைக் கலந்து குடித்துள்ளனர். இதனால் 3 பேருக்கும் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே மூவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். பின்னர், சிகிச்சை பலனளிக்காமல் சிவ சங்கர், பிரதீப், சிவராமன் ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர்.

இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள்.

ஏற்கெனவே புதுக் கோட்டை மாவட்டத்தில் குளிர் பானத்தில் ஷேவிங் லோஷனை கலந்து குடித்த 3 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: