கொரோனா வைரஸ்: இந்தியாவில் நான்காவது மரணம் பதிவானது; சர்வதேச விமானங்கள் தரையிறங்க தடை Coronavirus India Updates

பட மூலாதாரம், Getty Images
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 176ஆக அதிகரித்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் கூறும் நிலையில், இந்தியாவில் நான்காவது மரணம் பதிவாகியிருக்கிறது.
கொரோனா வைரஸ் காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
முன்னதாக டெல்லி, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுவரை 15 பேர் முழு உடல்நலம் பெற்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரானில் கோரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அனைத்து சர்தேச விமானங்களுக்கும் தடை
மார்ச் 22ஆம் தேதியில் இருந்து ஒரு வாரத்திற்கு இந்தியாவில் சர்வதேச விமானங்கள் தரையிறங்க தடை விதிக்கப்படுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் 65 வயதிற்கு மேலான நபர்கள், மற்றும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என அனைத்து மாநில அரசுகளும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்திய தலைநகர் டெல்லியில் மார்ச் 31ஆம் தேதி வரை உணவகங்கள் மூடப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். உணவகங்களில் அமர்ந்து சாப்பிட தடை விதிக்கப்படும் என்றும் பார்சல் மற்றும் உணவு விநியோக சேவைகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் எந்த நிகழ்வாக இருந்தாலும், 20 பேருக்கு மேல் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 42 பேருக்கும், அடுத்ததாக கேரளாவில் 25 பேருக்கும் உத்தரப்பிரதேசத்தில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மகாராஷ்டிர அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, "நாம் கொரோனா வைரஸுக்கு எதிராகப் போரிடுகிறோம். நாம் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேவையற்ற பயணத்தைத் தவிர்க்க வேண்டும். நிலைமை சிக்கலானதாக இல்லை என்றாலும் கவலையளிக்கக் கூடிய வகையில் உள்ளது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோதியிடம் பேசினேன். மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று அவர் உறுதியளித்தார்" என்று கூறினார்.
இந்நிலையில், மார்ச் 15ஆம் தேதி இண்டிகோ 6E96 விமானத்தில் பயணித்த அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கர்நாடகாவில் குடகு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
பிரதமர் நரேந்திர மோதி உரை
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் முதன் முதலாக கண்டறியப்பட்டு அந்த நாட்டை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ், தற்போது உலகின் பெரும்பாலான நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது.


இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், அதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோதி இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளதாக பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று (புதன்கிழமை) பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் அளவிலான கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
168 ரயில்கள் ரத்து
கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக ரயில்களில் மக்களின் வருகை குறைந்ததை அடுத்து நாளை முதல் மார்ச் 31ஆம் தேதி வரை நாடு முழுவதும் 168 ரயில் சேவைகளை ரத்து செய்துள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
அதே போன்று, தொடர்ந்து 11வது நாளாக இன்றும் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மட்டும் 50 சர்வதேச மற்றும் 34 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதுமுள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்த மாத இறுதிவரை திட்டமிடப்பட்டுள்ள தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லி அருகே உள்ள நொய்டாவில் செயல்படும் எச்.சி.எல். தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது. நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள ஊழியர் சமீபத்தில் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டதாக அந்த நிறுவனத்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அந்நகரத்தில் கோவிட் -19 நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளிருந்து வந்தோரை தவிர்த்து, இந்திய மக்களிடையே கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதா என்று சீரற்ற முறையில் 826 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஒருவருக்கு கூட நோய்த்தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளதாக இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை தொடர்ந்து, மும்பையின் பிரபல உணவுப்பொருள் சேவையான 'டப்பாவாலாக்கள்' நாளை முதல் இம்மாத இறுதிவரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக டெல்லி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், "கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் அறிவியல் மற்றும் தொழில்முறை ரீதியில் செய்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவரம் என்ன?
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் பாஸ்கர், "பாதிப்படைந்த நாடுகளில் இருந்து வந்தால், அறிகுறிகள் இருந்தால் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தனிமைப்படுத்தி, மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள். அறிகுறியாக இல்லாதவர்கள், ஆனால், நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருந்தால், பூந்தமல்லிக்கு அழைத்துச்சென்று விசாரிக்கிறோம். சிலரை வீட்டிலேயே தனிமைப்படுத்துகிறோம். இந்த முறை சரியாக செயல்படுவதால்தான் தமிழ்நாட்டில் நோய் பரவல் அதிகம் இல்லை" என்று கூறினார்.
"சர்வதேச விமான நிலையில் சோதனைகள் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டுவருகின்றன. ஸ்டான்லி மருத்துவமனையிலும் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் வார்டுகளை உருவாக்கவிருக்கிறோம். அதில் 31 படுக்கைகள் இருக்கும்."

"புதன்கிழமையன்று தனியார் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அனைவரிடமும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் கூட்டம் நடத்தப்பட்டது. அவர்களுக்கு இருந்த சந்தேகங்களை விளக்கினோம். எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்பதைச் சொன்னோம். தனியார் மருத்துவமனைகளும் தனிமைப்படுத்தப்படும் வார்டுகளை உருவாக்க முன்வந்திருக்கிறார்கள்" என்று அவர் மேலும் கூறினார்.
தட்டுப்பாட்டை பயன்படுத்தி மருத்துவ உபகரணங்களை அதிக விலைக்கு விற்பது தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் குறித்து விளக்கம் அளிக்க அமைச்சர் விஜய் பாஸ்கர், "3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தெர்மல் ஸ்கேனரை 15 ரூபாய்க்கு விற்ற கடையின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கே நிறைய என்95 முகமூடிகளும் நிறைய கைப்பற்றப்பட்டிருக்கிறது. ரயில் நிலையங்களில் வருபவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். எழும்பூரில் ஏழு வாயில்கள் வழியாக வெளியே வருபவர்களும் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்" என்று கூறினார்.
புதுச்சேரியில் என்ன நிலை?
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமையில், நோயாளிகள் மற்றும் அவர்கள் காண வருபவர்கள் என கூட்டம் அதிகமாக காணப்படுவதால் கொரோனா தொற்று பரவுவதை தவிர்ப்பதற்காக, சிறிய உபாதைகளுக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு வருவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது ஜிப்மர் நிர்வாகம்.
"இருமல், காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்" போன்ற வாசகங்களுடன் புதுச்சேரியில் பால் பாக்கெட்டுகளில் கொரோனா தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே அமர்ந்து மதுபானம் அருந்தும் வசதிகள் கொண்ட விடுதிகள், நட்சத்திர விடுதிகள் அனைத்தும் மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












