பட்ஜெட் 2020 : புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பூஜா மெஹ்ரா
- பதவி, பொருளாதார வல்லுநர்
பிரதமர் நரேந்திர மோதி ஆட்சிக்கு வந்து ஆறு ஆண்டுகள் ஆனபோதிலும், இளம் இந்தியர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் இந்திய பொருளாதாரத்திற்கான வளர்ச்சியை மேம்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. எனவே நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இரண்டாவது மத்திய பட்ஜெட் குறித்து மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இதில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படும் எனவும் மக்கள் எதிர்பார்த்தனர்.
2020-21 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் கடுமையான பொருளாதார மந்தநிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய குறைந்த வரி விதிப்பு மற்றும் அரசாங்கத்திற்கான செலவினங்களை அதிகரிக்கும் விதமாக பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பல நிதி திட்டங்களை நிதி அமைச்சர் அறிவித்தார்.
இந்த புதிய பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டமோ அல்லது பொருளாதார மந்தநிலையை சரி செய்வதற்கான சாத்தியங்களோ தென்படவில்லை. தனிப்பட்ட நிதித்திட்டங்கள் மற்றும் தேவையற்ற நுட்பமான விளக்கங்கள் நிறைந்த உரையாகவே நிதி அமைச்சரின் பட்ஜெட் உரை விளங்கியது. அரசாங்கத்தின் வருவாய் மற்றும் செலவினங்களுக்கு இடையில் நிலவும் நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3% முதல் 3.8% வரை கணிசமாக வளர்ந்துள்ளது.
நிதிப் பற்றாக்குறையில் இவ்வளவு பெரிய தாக்கம் இருந்தபோதிலும், வளர்ச்சியைப் புதுப்பிக்க முக்கியமான திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மிக குறைவாகவே உள்ளது.
2020-21ம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்காக 9,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, 2019-20 ஆம் ஆண்டு இதே திட்டத்திற்கு ஆன செலவீனங்களை விட இது குறைவு. பிரதான் மந்திரியின் கிசான் திட்டத்திற்காக சுமார் 20,000கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிதி, அதிக பண புழக்கம் உள்ள கிராம புர மக்களின் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தால் அது நல்ல முயற்சியாக அமைந்திருக்கும். இது நுகர்வோரின் செலவினங்களை அதிகரிக்க செய்து, பொருளாதாரத்தை ஊக்குவித்திருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
நிலையான வாழ்வாதாரத்தின் மூலம் மக்களின் வருமானத்தை தரமாக உயர்த்துவதே பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய முயற்சியாகும். பிரதமர் நரேந்திர மோதியும் நிலையான வாழ்வாதாரத்திற்கும் வருவாய்கும் உறுதி அளித்திருந்தார். ஆனால் நல்ல வளர்ச்சி காணப்பட்ட ஆண்டுகளில் கூட, பொருளாதாரம் பல வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை.
இந்த கட்டமைப்பு சிக்கலை ஒரு பட்ஜெட்டால் சரி செய்ய முடியாது. ஆனால் கடந்த பல நிதிநிலை அறிக்கைகளில் கூட இந்த கட்டமைப்பு சிக்கல்களை சரி செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த பட்ஜெட்டிலும் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் சில திட்டங்கள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. வெளிநாடு சென்று வேலை செய்ய விரும்பும் ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ துறை ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களுக்காக 3000கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பல நாடுகளின் மொழிகளும் கற்றுத்தரபடுகிறது.
தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள், மற்றும் பல மருத்துவ துறைகளுக்கான நிபுணர்களுக்கு இந்தியாவிலேயே பற்றாக்குறை உள்ளது. எனவே இந்த தேவைகளை பூர்த்தி செய்ய மருத்துவ கல்லூரிகளுடன் இணைந்து மருத்துவமனைகளே பயிற்சி வகுப்புகள் நடத்தி தேசிய தேர்வு ஆணையத்துடன் இணைந்து பட்டய படிப்பு சான்றிதழ்களை வழங்கவிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இதே பட்ஜெட்டில், மொபைல் ஃபோன் தயாரிப்பதற்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தொழில் நுட்ப துறையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இன்னும் சில காலம் ஆகலாம். ஆனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் மீதான முதலீட்டுகளை அதிகரிக்க, அரசாங்கம் இன்னும் கூடுதல் திட்டங்களை அறிவித்திருக்கலாம். அவர்கள் இந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டனர்.
வங்கி வைப்பு தொகை மீது செய்யப்பட்டிருந்த காப்பீட்டு தொகை அதிகரிப்பே இந்த பட்ஜெட்டில் உள்ள நல்ல திட்டமாக உள்ளது. முன்பு வங்கிகளில் மோசடி நடைபெற்றாளோ, கொள்ளையடிக்கப்பட்டாலோ வைப்பு தொகை வைத்திருந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்படும். ஆனால் தற்போது அந்த 1 லட்சம் ரூபாய் 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளனர்.
எல்.ஐ.சியின் பங்குகளை விற்பதும் வரவேற்கப்படுகின்றன. பொதுத்துறை முதலிடுகளை விற்பதன் மூலம், அரசுக்கு லாபம் கிடைக்கும். இதனால் எல்.ஐ.சி அதிக வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட முடியும், நல்ல நிர்வாகமும் அமையலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













