நாடாளுமன்ற தேர்தல் 2019: 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகுமா?

2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகுமா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சரோஜ் சிங்
    • பதவி, உண்மை பரிசோதிக்கும் குழு, பிபிசி

என்ன கூறினார்?: இந்திய பிரதமர் நரேந்திர மோதி 2016ஆம் ஆண்டு பேசியபோது. 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் என்றார்.

என்ன நடந்தது?: 2016 முதல் கடந்த மூன்று ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்திருக்கிறது. அண்மைய தரவுகள் எதுவும் இப்போது இல்லை. இந்த அரசாங்கம் விவசாயிகளின் வருவாயை பெருக்க சில திட்டங்கள் கொண்டு வந்திருந்தாலும், 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை பெருக்க வாய்ப்பில்லை என்றே நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கோபம் கொண்ட விவசாயிகள் தங்களின் பிரச்னைகளை ஒரு முடிவுக்கு கொண்டு வர வீதிக்கு வந்து போராடுவது நரேந்திர மோதி அரசாங்கத்தில் தொடர் கதையாகி வருகிறது.

கடந்தாண்டு டிசம்பரில் வெளியான தேர்தலில் சில மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்தது. இதற்கு காரணம் ஊரக பகுதிகளில் மோதி அரசு தன் செல்வாக்கை இழந்ததுதான் என சில ஊடகங்கள் கோடிட்டு காட்டின.

2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகுமா?

எங்கே எப்போது?

இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை 2022 ஆம் ஆண்டு கொண்டாடும் போது இந்திய விவசாயிகளின் வருமானமானது இரட்டிப்பாக ஆகி இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோதி 2016 ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடந்த பேரணியில் கூறினார்.

இந்திய உள்நாட்டு உற்பத்தியில் அது குறைந்த பங்களிப்பே அளித்தாலும், இந்திய பணி வாய்ப்புகளில் 40 சதவீத பங்களிப்பை விவசாயத்துறைதான் வழங்கி வருகிறது.

வருமானம் உயர்ந்து வருகிறதா?

2016 ஆம் ஆண்டு நபார்ட் (NABARD) ஆய்வின் படி, இந்திய விவசாயிகளின் சராசரி மாத வருமானம் ஒன்பதாயிரம் ரூபாய்.

வருவாய்

2016ஆம் ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகள் வருவாயை ஒப்பிடும் போது, அவர்களின் வருமானமானது 40 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.

பாரதிய ஜனதா அரசாங்கம் 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது.

அதற்கு பிறகான நிலவரம் என்னவென்ற தரவுகள் வெளிவராததால், விவசாயிகள் வருவாய் இப்போது என்னவென்று தெரியவில்லை.

விவசாயிகளின் வருவாய் 2022ஆம் ஆண்டிற்குள் இரட்டிப்பாக உயர வேண்டுமானால், அந்தத் துறை ஆண்டுக்கு 10.4 சதவீதம் என்ற கணக்கில் இருக்க வேண்டும் என்கிறது நிதி ஆயோக்.

விவசாய பொருளியல் வல்லுநர் அஷோக் குலாடி, "10.4 என்பது இரண்டாண்டுகளுக்கு முந்தைய கணக்கு, 2022ஆம் ஆண்டுக்குள் வருவாய் இரட்டிப்பாக ஆக வேண்டுமானால் 13 சதவீதம் என்ற கணக்கில் வளர்ச்சி இருக்க வேண்டும்" என்கிறார்.

விவசாயிகள் என்ன விதமா பிரச்னைகளை சந்திக்கிறார்கள்?

வறட்சி, மோசமான பருவநிலை, நவீன இயந்திரகள் போதுமான அளவு இல்லாமல் இருப்பது, போதுமான உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து இல்லாமை இந்திய விவசாயத் துறையை முடமாக்கி உள்ளது.

இந்த அரசாங்கம் விவசாயிகளுக்கான பல திட்டங்களை அறிவித்து இருக்கிறது.

  • வேளாண் காப்பீட்டு திட்டம்
  • உற்பத்தியை மேம்படுத்த மண்வள திட்டம்
  • விவசாய உற்பத்திகளை இணையம் மூலம் விற்பனை செய்ய திட்டம்

ஆனால் அதே நேரம், அதன் பிற பொருளாதார செயல்பாடுகள் விவசாயிகளின் நலனில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக கறுப்புப் பணம் ஒழிப்பதற்காக 500 மற்றும் 1000 ரூபாய் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட முடிவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் விவசாயிகள்.

2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகுமா?

விவசாய உற்பத்தி பல்வேறு பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்திருக்கிறது.

மத்திய பிரதேசத்தை இதனை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

2016 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோதி, "பாரதிய ஜனதா அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின், விவசாய உற்பத்தியில் மத்திய பிரதேசம் முதலாவது இடத்தை பிடித்துள்ளது" என்றார்.

2005ஆம் ஆண்டு, ஆண்டுக்கு 3.6 சதவீதமாக இருந்த மத்திய பிரதேசத்தின் விவசாய வளர்ச்சி, 2015ஆம் ஆண்டு 13.9 சதவீதமாக உயர்ந்தது என்று அரசு தரவுகள் கூறுகின்றன.

அதாவது, காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியிலேயே இந்த வளர்ச்சியை கண்டிருக்கிறது.

அந்த மாநில குற்றக் கணக்கின்படி, 2013 - 2016 இடைப்பட்ட காலத்தில் விவசாய தற்கொலைகள் கணிசமான அளவு உயர்ந்துள்ளன.

ஏன் விவசாயிகளால் அதிக வருவாய் ஈட்ட முடியவில்லை?

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதன் காரணம் மிக சிக்கலானது.

ஆனால், அதில் பெரும்பாலானவை கடன் சுமை சார்ந்தது. விதை, உரம் மற்றும் விவசாய உபகரணங்கள் வாங்குவதற்காக வாங்கப்பட்ட கடனை திரும்ப செலுத்த முடியாமல் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

விவசாய உற்பத்திக்கான விலைப் பொருள் குறைவாக இருப்பது அவர்களின் சிக்கலை மேலும் அதிகமாக்குகிறது. இதன் காரணமாக அவர்கள் பெற்ற கடனை மீண்டும் திரும்ப செலுத்த முடியாமல் திணறுகிறார்கள்.

விவசாய உற்பத்தி நன்றாக இருந்தால், அந்தாண்டு விலை வீழ்ச்சி மோசமானதாக இருக்கிறது.

இதனை எதிர்கொள்ளதான் அரசாங்கம், குறைந்தபட்ச விலையை நிர்ணயத்துள்ளது. இது நடைமுறையில் பல ஆண்டுகளாக உள்ளன.

நெல், கோதுமை, சோயாபீன்ஸ் உட்பட 24 விவசாய உற்பத்திக்கு இந்த குறைந்தபட்ச விலையானது நிர்ணயக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தரவுகளின்படி, இந்த குறைந்தபட்ச விலையானது பல ஆண்டுகளாக உயர்ந்துவந்துள்ளது.

விவசாய உற்பத்தியின் குறைந்தபட்ச கொள்முதல் விலையை உயர்த்துவதற்கு பதிலாக, ஒட்டுமொத்தமாக விவசாயிகளின் வருவாயை எப்படி பெருக்குவதென திட்டம் ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் சில நிபுணர்கள்.

தேர்தல் நெருங்கும் இந்த தருணத்தில், முக்கிய எதிர் கட்சியான காங்கிரஸின் தலைவர், ஏழை மக்களின் குறைந்தபட்ச வருவாய்க்கான திட்டத்தை அறிவித்திருக்கிறார்.

இந்தியாவில் யாரும் ஏழையாக இருக்கக் கூடாது, பசியுடன் இருக்கக் கூடாது என்று கூறி உள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியும் விவசாயிகளின் கடனை தள்ளுப்படி செய்வது தொடர்பாக சிந்திப்பதாக தகவல்கள் கசிக்கின்றன. ஆனால், இதற்கு பெரும்பணம் தேவை. இந்த செயலின் விளைவு தொடர்பான எதிர்மறை கருத்துகளும் இங்கு நிலவி வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: