இந்திய ராணுவம் 40 நாள் தொடர்ந்து போர் செய்வதற்கான ஆயுதங்களை தயார்படுத்துகிறது - ஏன்?

போருக்கு ஆயுதங்களை தயார்படுத்தும் இந்திய ராணுவம் - என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: "போருக்கு ஆயுதங்களை தயார்படுத்தும் இந்திய ராணுவம்"

இந்திய ராணுவம் 40 நாள்கள் வரை தொடர்ந்து போரிடுவதற்குத் தேவையான ஆயுதங்களை தயார்படுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

மொத்தம் 13 லட்சம் வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவம் படிப்படியாக ராக்கெட், ஏவுகணை, பீரங்கி வாகனங்கள், வெடிகுண்டுகள் என 40 நாள்கள் போரிடுவதற்குத் தேவையான ஆயுதங்களைக் குவித்து வருகிறது.

News image

"ராணுவத்தில் வழக்கமாக 10 நாள்கள் முழு வீச்சுடன் போரிடுவதற்குத் தேவையான ஆயுதங்கள் தயார் நிலையில் இருக்கும். இதை, வரும் 2022-23-ஆம் ஆண்டுக்குள் 40 நாள்களுக்குத் தேவையான அளவுக்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களை இருப்பில் வைப்பதால், இந்தியா போருக்குத் தயாராகி விட்டது என்று அர்த்தமில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும், அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா ஆகியவற்றை மனதில் கொண்டு ஆயுத அதிகரிப்பில் ராணுவம் ஈடுபட்டுள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்கு முன்பு ராணுவத்தில் போதிய அளவில் தளவாடங்கள் இல்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, ராணுவத்துக்குப் புதிதாக ரூ.12,890 கோடி செலவில் போர் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்காக, 19 வெளிநாட்டு நிறுவனங்களுடன் 24 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அது மட்டுமன்றி, உள்நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களிடம் ஆண்டுக்கு ரூ.1,700 கோடி மதிப்பிலான பீரங்கி வாகனங்கள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை, வரும் 2022-23-ஆம் ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளுக்குக் கொள்முதல் செய்வதற்கான பணிகளைப் பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது." என்று பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் திங்கள்கிழமை கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

Presentational grey line
Presentational grey line

தினத்தந்தி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்

பட மூலாதாரம், Getty Images

இது தொடர்பாக, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சார்பில் அவரது வக்கீல் ஜி.எஸ்.மணி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், " ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசின் அனுமதி தேவை இல்லை என்று மத்திய அரசு கடந்த 16-ந்தேதி அரசிதழில் அறிவிப்பாணை வெளியிட்டு உள்ளது.

இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இதுபோன்ற திட்டங்களால் காவிரி டெல்டா பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்பு அடையும். விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும். விவசாயம் முடங்கி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை உருவாகும். எனவே சுற்றுச்சூழல் அனுமதி இன்றியும், பொதுமக்களிடம் கருத்து கேட்காமலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அரசமைப்பு சட்டத்துக்கு எதிரான மத்திய அரசின் இந்த அறிவிப்பாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

Presentational grey line

இந்து தமிழ் திசை: "நீட் தேர்வில் யாருக்கும் விலக்கு அளிக்க முடியாது"

"நீட் தேர்வில் யாருக்கும் விலக்கு அளிக்க முடியாது"

பட மூலாதாரம், Getty Images

நீட் தேர்வில் இருந்து சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகள் உட்பட யாருக்கும் விலக்கு அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளனர்.

நீட் தேர்வில் இருந்து சிறுபான்மை மருத்துவக் கல்லூரியான தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரி வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது.

அப்போது நீதிபதிகள், ''நீட் தேர்வுக்கு விலக்கு கோரியது தொடர்பாக சிஎம்சி மருத்துவக் கல்லூரி தொடர்ந்த வழக்கு ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்டதே, தற்போது அதில் மீண்டும் புதிதாக என்ன இருக்கிறது" என கேள்வி எழுப்பினர்.

சிஎம்சி தரப்பில், ''நீட் தேர்வை கட்டாயமாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத் திருத்த உத்தரவை எதிர்த்து வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி சார்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது நீட் சட்டத்திருத்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு என்பதால் அது தொடர்பாக வாதிடுகிறோம்'' என தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், ''ஏற்கெனவே மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு அவசியம் என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விரிவாக உத்தரவிட்டுள்ளது. அதில் இருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. இந்த விஷயம் ஏற்கெனவே இறுதி செய்யப்பட்ட ஒன்று. நாடு முழுவதும் நீட் தேர்வு நடக்கும்போது அதில் சிறுபான்மைக் கல்லூரி என்பதற்காக மட்டும் விலக்கு அளிக்க முடியுமா? ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவருக்காக நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை மாற்றியமைத்துக் கொண்டு இருக்க முடியாது. நீட் தேர்வை அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமே (எய்ம்ஸ்) பின்பற்றும்போது நீங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? இதில் நாங்கள் திட்டவட்டமாக இருக் கிறோம். இந்த விஷயத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை'' என்று தெரிவித்தனர்.

அதையடுத்து சிஎம்சி கல்லூரி தரப்பில், அந்த மனுவை வாபஸ் பெற அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டது.

அதற்கு முதலில் அனுமதி மறுத்த நீதிபதிகள், பின்னர் வாபஸ் பெற அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Presentational grey line

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "ஏர் இந்தியா விற்பனைக்கு"

ஏர் இந்தியா

பட மூலாதாரம், Getty Images

கடனில் சிக்கித் தவித்து வரும் பொதுத் துறை நிறுவனமான ஏா் இந்தியாவின் 100 சதவீத பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளதாக மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

பங்கு விற்பனைக்கான முதல்கட்ட ஏல ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பங்குகளை வாங்க விரும்புவோர் மார்ச் 17-ம் தேதி வரை தங்களது விருப்பங்களைத் தெரிவிக்கக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்கு விற்பனையில் பங்கேற்று வெற்றிபெறும் ஏலதாரருக்கு ஏா் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக கட்டுப்பாடு மாற்றப்படும் என்று மத்திய அரசு ஏல ஆவணத்தில் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: