தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: 'இரவு முழுவதும் வாக்குகள் எண்ணப்படும்'

அதிமுக திமுக இடையே கடும் போட்டி

தற்போது வெளியாகி வரும் தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் கூட்டணிகளுமே கணிசமான இடங்களில் வெற்றி பெற்று வருகின்றன.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இரவு முழுவதும் வெளியாகும். நாளைக்குள் ஒட்டுமொத்த முடிவுகளும் வெளியிட முயற்சி செய்யப்படும், என்று தமிழ்நாட்டின் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று மாலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி

பட மூலாதாரம், https://tnsec.tn.nic.in/

படக்குறிப்பு, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி

தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.

மொத்தம் 91,975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்குக் கடந்த 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெற்றது.

ஒன்றிய கவுன்சிலர்களுக்கான உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில் மொத்தமுள்ள 5,067 இடங்களில் அதிமுக கூட்டணி 341 இடங்களிலும் திமுக கூட்டணி 382 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இதேபோல மாவட்ட கவுன்சிலர்களுக்கான முடிவுகளில் அதிமுக கூட்டணி 94 இடங்களிலும், திமுக கூட்டணி 90 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்

ஒருசில இடங்களில் வாக்கு எண்ணும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திமுக குற்றச்சாட்டு

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு தேர்தல் தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று முக ஸ்டாலின் இது தொடர்பாக புகார் அளித்தார்.

கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சி.சாத்தமங்கலம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற திருநங்கை ரியா

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு 2வது வார்டு ஒன்றியக் கவுன்சிலராக திமுக வேட்பாளர் திருநங்கை ரியா வெற்றி பெற்றுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

புகார் மனு அளித்ததை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஸ்டாலின், "திமுக கூட்டணி முன்னணியில் இருக்கிறது. ஆனால், சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுக முன்னிலை வகித்தும், முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஆக்குகின்றனர். திமுகவின் வெற்றியை முறியடிக்க சதி நடக்கிறது. அதிமுகவினர் பல முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள். இது தொடர்பாக அந்தந்த இடங்களில் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை. அதனால்தான் நேரில் தலைமை அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தோம். எங்கள் முன்பாகவே தலைமை ஆணையர், சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையர் உறுதி அளித்தார்" என தெரிவித்தார்.

ஸ்டாலின்

பட மூலாதாரம், facebook

இங்கு கிராம ஊராட்சி தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட அருள்பிரகாசம் என்ற வேட்பாளரின் பெயர் இறுதியாக வெளியிடப்பட்ட துணை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்ற காரணத்திற்காக வாக்கு எண்ணிக்கே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கீரப்பாளைய ஒன்றியத்திற்கு உட்பட்ட தேர்தல் அலுவலர் கூறுகையில், "கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து வந்த உத்தரவினால் தற்சமயம் சம்பந்தப்பட்ட சி.சாத்தமங்கள் கிராம ஊராட்சி மன்ற தலைவருக்கான வாக்கு எண்ணிக்கையானது தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளதாக," தெரிவித்தனர்.

தமிழகத்தில் இரண்டாகப் பிரிக்கப்பட்ட மற்றும் பிரிக்கப்பட்ட மாவட்டங்களிலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்கள் மற்றும் சென்னை தவிர 27 மாவட்டங்களின் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெற்றது.

சென்னை மாவட்டம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பான மாநகராட்சிக்குள் வருவதால் அங்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகள் எதுவும் இல்லை.

இந்தத் தேர்தலில் வாக்களித்தவர்கள் ஒவ்வொருவரும் நான்கு வெவ்வேறு பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களித்தார்கள்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் யார் யார் வெற்றி பெற்றனர் தொடர்பான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான செய்திகளுக்கு:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: