ஜாமியா போராட்டம்: ‘’பல்கலைக்கழகத்தில் போலீசார் நுழைந்ததற்கு எதிராக வழக்கு தொடரவுள்ளோம்’’

நஜ்மா அக்தர்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, நஜ்மா அக்தர்

டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் மற்றும் போலீசாரின் நடவடிக்கைகளை குறித்து இன்று (திங்கள்கிழமை) பல்கலைக்கழக துணைவேந்தர் நஜ்மா அக்தர் செய்தியாளர்களை சந்தித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''எங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் போலீசார் நுழைந்ததற்கு எதிராக நாங்கள் வழக்கு தொடரவுள்ளோம். பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்து வளாகத்தை புதுப்பிக்கமுடியும். ஆனால் மாணவர்களுக்கு நிகழ்ந்ததை நீங்கள் சரிசெய்ய முடியாது'' என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ''நடந்த சம்பவங்கள் குறித்து உயர் அளவு விசாரணை நடத்த நாங்கள் கோரிக்கை வைப்போம்'' என்றார்.

''மாணவர்கள் நடத்தப்பட்ட விதத்தை கண்டு நான் வேதனை அடைகிறேன். இந்த போராட்டத்தில் மாணவர்கள் மட்டும் தனியாக இல்லை என்பதை இந்நேரத்தில் தெரியப்படுத்துகிறேன். நானும் அவர்களுடன் இருக்கிறேன்'' என்றார்.

''பல்கலைக்கழக வளாகத்தில் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த இழப்பீடுகளை எப்படி சரிசெய்வது? அதேபோல் உணர்வுபூர்வமான இழப்புகளும் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. நேற்றைய சம்பவம் மிகவும் துரதிருஷ்வசமானது. அதேவேளையில் எந்த வகையான வதந்திகளையும் நம்பவேண்டாம் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்'' என்று மேலும் நஜ்மா அக்தர் குறிப்பிட்டார்.

''இரண்டு மாணவர்கள் இந்த சம்பவத்தில் இறந்துவிட்டதாக ஒரு வதந்தி உலவிவருகிறது. இதனை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். எங்கள் மாணவர்கள் யாரும் இறக்கவில்லை. கிட்டத்தட்ட 200 பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் எங்கள் மாணவர்கள்'' என்று அவர் மேலும் இந்த சந்திப்பில் தெரிவித்தார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

ஜாமியா பல்கலைக்கழக வளாகத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுவது பற்றி இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக பதிவாளர் ஏ பி சித்திக்கி, 'இது குறித்து துணை காவல் ஆணையர் மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகளிடம் நாங்கள் பேசினோம். அவர்கள் இந்த வதந்தியை முற்றிலுமாக மறுத்துள்ளனர்' என்று கூறினார்.

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மசூதியில் போலீசார் நுழைந்ததாகவும், விடுதியில் உள்ள சில மாணவிகள் மீது பாலியல் ரீதியான தாக்குதல் நடத்தியதாகவும் வெளியாகும் செய்திகள் குறித்து அவர் கூறுகையில், ''சமூகவலைத்தளங்களில் ஏராளமான வதந்திகள் உலவுகின்றன. இவை அனைத்தையும் நாங்கள் முழுவதுமாக மறுக்கவும் முடியாது, உறுதி செய்யவும் முடியாது'' என்று தெரிவித்தார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

இதனிடையே, டெல்லியில் சட்டம்-ஒழுங்கு மோசமடைந்து வருவது கவலை அளிக்கிறது என்றும் டெல்லியில் உடனடியாக அமைதியை மீட்டெடுக்க வேண்டும் என்றும் டெல்லி மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: