சினிமா பார்த்து நகைப்பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் - ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை

பட மூலாதாரம், Getty Images
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ் திசை - ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருட்டு
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த சில வாரங்களாக அடிக்கடி நகைப் பறிப்பு, வழிப்பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இவ்வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க, காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர் என்கிறது இந்து தமிழ் திசையின் செய்தி.
அதில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்டதாக 5 பேரை கைது செய்தனர். விசாரணையின்போது, ஐந்து பேரில் ஒருவர் அளித்த வாக்குமூலம் போலீஸாரை அதிர்ச்சியடைய செய்தது.
இதுதொடர்பாக மாவட்ட காவல்துறையினர் கூறும்போது, ''கைது செய்யப்பட்டவர் டிப்ளமோ படித்துள்ளார். சரிவர வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்தபோது, சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தை பார்த்துள்ளார். அதில், கதாநாயகனின் சகோதரர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, நண்பர்களுடன் இணைந்து பெண்களிடம் நகைப்பறிப்பது, வழிப்பறி செய்வது உள்ளிட்டவற்றில் ஈடுபடுவார். அதை பார்த்து ஈர்க்கப்பட்ட அவரும் நகைப்பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்." என்று போலீஸார் தெரிவித்ததாக விவரிக்கிறது அச்செய்தி.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா - குடித்துவிட்டு வாகனம் ஒட்டுகின்றனரா? - பெண்களிடமும் சோதனை

பட மூலாதாரம், Getty Images
விரைவில் சென்னையில் குடித்துவிட்டு வண்டி ஓட்டும் பெண்களை பிடிக்க சிறப்பு போக்குவரத்து குழு அமைக்கப்படும் அதிகம் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் பெண்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அவர்கள் நிறுத்தப்படுவதில்லை என புகார்கள் வந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்கிறது தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி.
இந்த விஷயத்தில் தங்களின் கைகள் கட்டப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். பெண் போலீஸார் எங்களுடன் இல்லை என்றால் நாங்கள் பெண் ஓட்டுநர்களை நிறுத்தவதில்லை என நுங்கம்பாக்கம் துணை ஆய்வாளார் சரத்குமார் தெரிவிக்கிறார் என்கிறார் அச்செய்தி.
அந்த சிறப்பு குழுவில் ஒரு பெண் துணை ஆய்வாளர், இரண்டு தலைமை காவலர்கள் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் இருப்பர்; தற்போது சென்னையில் 100க்கும் குறைவான பெண் காவலர்களே உள்ளனர் என்று மேலும் விவரிக்கிறது அச்செய்தி.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - வெளிநாட்டு பிரசாரம்

பட மூலாதாரம், Getty Images
திருபுவனம் பஞ்சாயத்து யூனியன் தலைவர் பதிவிக்கு போட்டியிடும் சுயேச்டை வேட்பாளார் ஒருவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் 18 பிரான்ஸ் நாட்டு பெண் ஒருவர் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.
சோ என்னும் அப்பெண் ஆறுமாதத்திற்கு முன்பு சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ளார். வேட்பாளர் மருதுபாண்டியனின் உறவின் மூலம் அவரின் பிரசாரம் குறித்து கேள்விப்பட்டு அவருடன் தேர்தல் பிரசாரத்தில் இணைந்துள்ளார்.
பிரசாரத்தில் ஆர்வமாக பங்கு பெற வந்த சோ மருதுபாண்டியன் வேட்பு மனு தாக்கல் செய்யவும் உதவி செய்துள்ளார்.
அந்த பிரசாரத்தில் வோட் ஃபார் மாமா (மாமாவிற்கு வாக்களியுங்கள்) என்ற கோஷத்தையும் பயன்படுத்தி வருகிறார் என்று மேலும் விவரிக்கிறது அச்செய்தி.

தினமணி - ஆதார் பான் இணைப்பு

பட மூலாதாரம், Getty Images
இந்த ஆண்டு இறுதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது என்கிறது தினமணியின் செய்தி
இதுகுறித்து வருமான வரித் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளதாவது:
வருமான வரி சேவைகளின் தடையற்ற பலன்களைப் பெறுவதற்கு ஆதாருடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயமாகிறது. அந்த வகையில், வரும் டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்னதாக அனைவரும் ஆதாருடன் பான் எண்ணை கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கு செப்டம்பா் 30-ஆம் தேதி கடைசி நாளாகும் என வருமான வரித் துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அந்தக் காலக்கெடுவை டிசம்பா் 31-ஆம் தேதி வரையில் நீடித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டது என்று மேலும் விவரிக்கிறது அச்செய்தி.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












