வகுப்பு 5, 8 பொதுத் தேர்வு: "அது பிட்டு பேப்பர் இல்லை சார்... பேம்பர்ஸ்" - அரசை கலாய்க்கும் நெட்டிசன்கள்

வகுப்பு 5 மற்றும் 8க்கு பொதுத் தேர்வை அறிவித்துள்ளது தமிழக அரசு. இதற்கு சமூகத்தில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மாணவர்களுக்குக் கூடுதல் சுமை, மாணவர்களை வடிகட்டும் செயல், இடை நிற்றல் அதிகரிக்கும் என்று கல்வியாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசனும், "உலகில் பல்வேறு நாடுகள் தேர்வு முறையை ரத்து செய்யும் சூழலில், இங்குத் தேர்வுகளை அதிகரிப்பதால் குழந்தை தொழிலாளர்கள் உருவாகுவார்கள்," என்றார்.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் பொதுத் தேர்வை ஆதரித்துள்ளது.

அவர்கள் இது தொடர்பாகப் பகிர்ந்த அறிக்கையிலேயே ஏராளமான பிழைகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் கிண்டல் செய்யப்பட்டது.

மேலும், அரசின் பொதுத் தேர்வு முறையைக் கிண்டல் செய்தும், ஆதரித்தும் ஏராளமான மீம்ஸ்கள் சமூக ஊடகங்களில் உலவுகின்றன. அதனை இங்கே தொகுத்து வழங்கி உள்ளோம்.

இப்படியான சூழலில், நேற்று ஈரோட்டில் பத்திரிகையாளர்களிடம், தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதில் இருந்து, மூன்றாண்டு காலம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்தார்.

பட்டாம்பூச்சிகளுக்கு விடுதலையளித்த மோதி:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :