தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு - இந்தக் கல்வியாண்டே அமலாகிறது

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள ஆணை தெரிவிக்கிறது.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தச் சட்டத்தில், 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும் அதில் தேர்வாகாத மாணவர்களுக்கு தேர்வு முடிவான நாளில் இருந்து இரண்டு மாத காலத்துக்குள் மறு தேர்வு நடத்தப்படும் எனவும் வழிவகை செய்யப்பட்டது.

அந்தத் தேர்விலும் தேர்வாகத மாணவர்கள் மீண்டும் 5 மற்றும் 8ஆம் வகுப்பே படிக்க வேண்டும்.

இந்தச் சட்டத்திருத்தம் 2019 மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசிதழில் அறிவிக்கை தெரிவிக்கிறது.

2019-2020ம் கல்வியாண்டில் இருந்து 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தவும், முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என்றும் தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :