பிற மாநிலங்களில் தமிழ் மொழிப் பாடம்: ட்விட்டர் பதிவை நீக்கினார் முதல்வர் பழனிசாமி

பட மூலாதாரம், Getty Images
பிற மாநிலங்களில் பள்ளிக்கூடங்களில் விருப்ப பாடங்கள் பட்டியலில் தமிழ் மொழியை சேர்க்கவேண்டும் என ட்விட்டர் தளத்தில் பிரதமர் மோதிக்கு கோரிக்கை விடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காலையில் முதல்வரின் ட்விட்டர் பக்கத்தில் பிற மாநிலங்களில் மாணவர்கள் விருப்பபாடமாக பயிலும் மொழிகளில் தமிழ் மொழியையும் சேர்க்கவேண்டும் என்றும் அது உலகின் தொன்மையான மொழிக்கு செய்த சேவையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டு முதல்வர் பழனிசாமி பிரதமர் மோதிக்கு ட்விட்டர் வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.
புதிய கல்வி கொள்கையின் வரைவு
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் வரைவு வடிவத்தில், நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் மூன்று மொழிகளை கற்பிக்கவேண்டும் என்ற விதிமுறை உள்ளது. முன்னதாக இந்தி மொழி மூன்றாவது மொழியாக கட்டாயமாக படிக்கவேண்டும் என்ற விதிமுறை, தமிழகத்தில் கிளம்பிய எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது.
ஆனால் மும்மொழிகளை மாணவர்கள் கற்கவேண்டும் என்ற விதியில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்தி மட்டுமல்ல, மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மூன்றாவதாக ஏதாவது ஒரு இந்திய மொழியை படிக்க வேண்டும் என்ற விதி புகுத்தப்பட்டது.
ஆனால் தமிழகம் இருமொழி கொள்கையை பின்பற்றுவதால், மூன்றாவது மொழியாக வேறு மொழியை மாணவர்கள் பயில கட்டாயப்படுத்தக் கூடாது என அரசியல் தலைவர்கள் கூறிவரும் நிலையில், முதல்வரின் வேண்டுகோள் இந்த விவகாரத்தில் மேலும் கவனத்தை ஏற்படுத்தியது.
இருமொழிக் கொள்கை
முன்னதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழகம் இருமொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றும் என்றும் முதல்வர் பிரதமருக்கு இருமொழி கொள்கையை பற்றி கடிதம் எழுதியுள்ளதாக கூறியது குறிப்பிடத்தக்கது. ஆனால் முதல்வரின் ட்விட்டர் கோரிக்கை மூலம், அவர் மும்மொழி கொள்கையை ஏற்பதால்தான், விருப்பப்பாடம் குறித்து பதிவிட்டாரா என்ற கருத்தும் எழுந்தது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
தற்போது முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு எதனை சுட்டிக்காட்டுகிறது என எழுத்தாளர் மற்றும் ஆசிரியான வெண்ணிலாவிடம் கேட்டோம் .
''மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழியை படிக்கலாம் என புதிய கல்விகொள்கையின் வரைவு வடிவத்தில் திருத்தும் செய்யப்பட்டுள்ளது. இந்திய மொழி என்ற பட்டியலின் கீழ், தமிழ் மொழியும் அடங்கும். கடந்த வாரத்தில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் முதல்வர் இருமொழி கொள்கை பின்பற்றப்படும் என்ற கூறியுள்ளனர். இதனால், முதல்வர் என்ன காரணத்திற்காக ட்விட்டரில் தற்போது விருப்பப்பாடமாக தமிழை சேர்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது தெளிவாகவில்லை,'' என்று கூறுகிறார் வெண்ணிலா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












