முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு: மக்களவையில் நிறைவேறியது மசோதா

இடஒதுக்கீடு

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா நாடாளுமன்ற மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.

இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக திங்கள்கிழமை செய்தி வெளியானது. அடுத்த நாளே, செவ்வாய்க்கிழமையே, இதற்கான சட்ட முன்வடிவை (மசோதாவை) மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் தாவார் சந்த் கேலாட் நாடாளுமன்றத்தின் மக்களவையில் தாக்கல் செய்தார்.

இரவே இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடந்தது.

காங்கிரஸ் கட்சியும் இந்த மசோதாவை ஆதரித்ததால், மொத்தம் வாக்கெடுப்பில் பங்கேற்ற 326 பேரில் 323 பேர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மூவர் எதிர்த்து வாக்களித்தனர்.

ஆதரவு

இந்த இடஒதுக்கீட்டால் கோடிக்கணக்கான இளைஞர்கள் பயன்பெறுவார்கள். இதனால் பட்டியல் சாதி, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் 50 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எந்த இடையூறும் வராது என்று பா.ஜ.க தலைவர் கூறியதாக ஏ.என்.ஏ செய்தி முகமை கூறுகிறது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் கே.வி. தாமஸ், நாங்கள் இந்த இடஒதுக்கீட்டு மசோதாவை ஆதரிக்கிறோம். ஆனால், இது கொண்டு வரும் முறைதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதனை முதலில் நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்புங்கள் என்று கூறினார் என்கிறது ஏ.என்.ஏ

மக்கள் நலத் திட்டங்கள்? - அதிமுக மக்களவை உறுப்பினர்

ஏழைகளுக்கான மக்கள் நலத் திட்டங்கள் தோல்வி அடைந்துவிட்டதா? ஏராளமான திட்டங்கள் உள்ளன. இந்த இட ஒதுக்கீடு மசோதாவானது உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்படும்

அவர், "பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் உள்ளன. அதனல் இடஒதுக்கீடு தேவையில்லை" என இந்த விவாதத்தின் போது கூறி உள்ளார்.

இதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து ஆதரவும், எதிர்ப்பும் வந்த சூழ்நிலையில் இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்து வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: