ஜொமேட்டோ ஊழியர் பதவி நீக்கம்: டெலிவரி செய்ய கொண்டு சென்றபோது உணவை உண்டதாக புகார்

பட மூலாதாரம், Getty Images
ஆன்லைன் பதிவு மூலம் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஜொமேட்டோவின் ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர்களின் உணவை திறந்து உண்டு மீண்டும் அதனை பேக் செய்து வைப்பது போலக் காட்டும் காணொளி வைரலானதை அடுத்து அந்த ஊழியரை அந்நிறுவனம் பணியில் இருந்து நீக்கியுள்ளது.
மதுரையில், ஜொமேட்டோ டி ஷர்ட் அணிந்து கொண்டிருந்த அவர் தனது வண்டியில் இருந்த உணவை எடுத்து சாப்பிட்டுவிட்டு அதை மீண்டும் பேக் செய்து வைப்பது போலத் தோன்றும் காணொளி வைரலானது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
பல்லாயிரம் பேர் அந்த காணொளியை பார்த்தனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
அந்த ஊழியர் வாடிக்கையாளர்களின் உணவை உண்டதாக ஒப்புக் கொண்ட சொமேட்டோ நிறுவனம் இம்மாதிரியான செயலை தங்களது நிறுவனம் துளியும் பொறுத்துக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட நபரை பணியிலிருந்து நீக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சம்மந்தப்பட்ட நபரிடம் தங்கள் நிறுவனம் விசாரணை நடத்தியதாகவும், இது மனிதரால் இழைக்கப்பட்ட தவறு என்றும் அவரை பணியிலிருந்து விலக்கிவிட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சொமேட்டோ வெகு விரைவிலேயே சீல் போன்ற ஏற்பாட்டை அறிமுகப்படுத்தப்போவதாகவும், டெலிவரி செய்பவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்