உடுமலை கெளசல்யா திருமணத்தை மட்டும் வசைபாடுவது ஏன்?

பட மூலாதாரம், Facebook
மறுமணம் என்பது தமிழகத்துக்குப் புதிதல்ல. ஆனால், சமூக ஊடகங்களில் சிலர் கெளசல்யா திருமணத்தை மட்டும் வசைபாடுவது ஏன்? என பிபிசி நேயர்களிடன் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
அதற்கு அவர்கள் அளித்த கருத்துகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

ஆணாதிக்க சமுதாயம் இன்னமும் ஓய்ந்த பாடில்லை என்பது இங்குள்ள சில பதிவுகளை பார்த்தால் தெரியும் என்கிறார் தேவி ராமசாமி. அவர், " திருமதி கௌசல்யாவின் கணவர் சங்கர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர் என்பதலாயே சாதி வெறியர்களால் கொலை செய்யப்பட்டதன் காரணமாக கைம்பெண் ஆனவர். மற்ற சாதாரண பெண்களைப்போல மூலையில் முடங்கிப்போய் அடங்காமல் இந்த சமுதாய அவலத்திற்கு எதிராக செயல்படும் முற்போக்கு சிந்தனையாளர்களுடன் கைகோர்த்து அந்த கொடுமைகளுக்கு எதிராக போராடி வருபவர். தன் கருத்தை ஒத்த ஒரு வாலிபனை எல்லோர் முன்னிலையிலும் மறுமணம் செய்து கொண்டதில் என்ன தவறு?" என்கிறார்.


பட மூலாதாரம், Twitter

"அவர்கள் சங்கரை கொலை செய்தது குற்றமில்லையாம்...கெளசல்யா மறுமணம் செய்தது குற்றமாம் இதற்கு பெயர்தான் சாதிவெறி" என்கிறார் சாமி சாம்.

பட மூலாதாரம், Nathan G



பெண்களை வெறும் உடமைகளாக மட்டுமே பார்க்கும் ஆணாதிக்க மனோபாவம் கொண்டவர்கள். இவர்களுக்கு இந்த பெண் யாரென்றுகூட தெரியாது நேரில் பார்த்துகூட இருக்கமாட்டார்கள். பின் ஏன் இந்த வன்மம்? இது வெறும் ஜாதிவெறி மட்டுமல்ல ஆணாதிக்கமும் பெண்களை மனிதர்களாக நினைக்காது பொருள்களாக என்னும் மனப்பாங்கும் இணைத்த ஒரு உளவியல் இது என்கிறார் கோமான் முகம்மது.



பட மூலாதாரம், Twitter

"உங்களில் எவர் ஒருவரால் சங்கரை திருப்பி அப்பெண்ணிடம் சேர்ப்பிக்க முடியுமோ அவர் மட்டும் கல்லெறியலாம்! வசைபாடலாம் திட்டலாம் ... இது திருமணம் என்பதைவிட பாதுகாப்புக்காகவே நடந்தது என்றே சொல்லலாம்" என்கிறார் அசோக் சுமன்.


பட மூலாதாரம், Twitter

"ஏன் என்றால் ஒரு பெண் ஜாதி கட்டமைப்பையே எதிர்த்து அதை உடைப்பது மறுமணம் செய்வது அவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது." என்கிறார் நிரஞ்சன் தரணி.

நாகரீகம் அடைந்த சமுதாயமாக மாறுவதற்கு தமிழகம் இன்னும் மிக மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியி௫க்கிறது என்பது மஹா நடராசனின் கருத்து.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












