வாக்களிப்புக்கு பிந்தைய கணிப்புகள் துல்லியமானவையா?

வாக்களிப்புக்கு பிந்தைய கணிப்புகள் துல்லியமானவையா?
    • எழுதியவர், ஷதாப் நாஸ்மி
    • பதவி, பிபிசி

இந்தியாவில் மத்திய பிரதேசம், சத்திஸ்கர், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்களுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், அதற்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.

பல்வேறுபட்ட கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மிக நெருக்கமான போட்டி நிலவுவதாகவும் தெரிவிக்கின்றன.

தேர்தல் முடிவுகளில் சில தெளிவுகளை இந்த வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வழங்க வேண்டும்.

ஆனால், பலமுறை இவை அதிக குழப்பங்களை உருவாக்குபவையாக இருந்துள்ளன.

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் துல்லியமானவையா? அல்லது எல்லாம் ஊகத்தின் அடிப்படையில் வெளியிடப்படுவதுதானா?

இதற்கு பதிலளிக்கும் வகையில் 2014 முதல் 2018ம் ஆண்டு வரை நடைபெற்ற வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களை பிபிசி ஆய்வு செய்தது.

வாக்களிப்புக்கு பிந்தைய கணிப்புகள் துல்லியமானவையா?

பட மூலாதாரம், AFP

பெரும்பாலான நேரங்களில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெற்றி பெறுபவரை சரியாகவே கணிக்கின்றன. ஆனால், எத்தனை தொகுதிகளை கட்சிகள் பெறும் என்பதை கணிப்பதில் இவை சரியான இருப்பதில்லை.

நெருங்கிய போட்டி

2017ம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கணிப்புகள் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) வெல்லும் என்பதை தெளிவாக கூறின.

பாஜக 111 தொகுதிகளில் வெல்லும் என்றும், காங்கிரஸ் 71 தொகுதிகளில் வெல்லும் என்றும் 'சி-வேட்டர்' கணித்து வெளியிட்டது.

ஆனால், 'டுடேஸ் சானக்கியா' பாஜக 135 தொகுதிகளையும், காங்கிரஸ் 47 தொகுதிகளையும் வெல்லும் என்று கூறியது.

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் சராசரியை நாம் பார்த்தால் 65 சதவீத தொகுதிகளை பாஜக வெல்லும் என்று கூறப்பட்டது.

ஆனால், வாக்கு எண்ணப்பட்ட பின்னர் வெளியான முடிவுகளில் பாஜகவுக்கு 10 சதவீத வீழ்ச்சி இருந்தது.

வாக்களிப்புக்கு பிந்தைய கணிப்புகள் துல்லியமானவையா?

பட மூலாதாரம், Getty Images

கருத்துக்கணிப்புகளின்படி, காங்கிரஸ் 65இல் இருந்து 70 தொகுதிகள் வரை வெல்லலாம் என்று கூறப்பட்டது. ஆனால், காங்கிரஸ் மொத்தம் 77 தொகுதிகளையே வென்றது.

இந்நேரத்தில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கணிப்புக்களின் முடிவுகள் பாஜகவுக்கும், காங்கிரஸூக்கும் மிகவும் நெருங்கி இருந்ததால், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் யார் வெற்றி பெறுவார் என்று கணிக்க முடியவில்லை.

2018ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்களில், முடிவு வெளிவருவதற்கு பல மாதங்களுக்கு முன்னரே, இந்த தேர்தல் கணிப்பதற்கு மிகவும் கடினமானது என்று பல அரசியல் ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை
இலங்கை

ஏபிபி நியூஸ் சி-வேட்டர் , பாஜக 110 தொகுதிகளையும், காங்கிரஸ் 111 தொகுதிகளையும் வெல்லும் என்று கணித்தது.

வாக்கு எண்ணப்பட்ட பின்னர் வெளியான முடிவுகளில் முந்தைய சட்டப்பேரவை தேர்தலோடு ஒப்பிடுகையில் பாஜக அதிக தொகுதிகளை வென்றிருந்தது. 100க்கு அதிகமான தொகுதிகளில் வென்றிருந்தாலும் அதனால் அரசு அமைக்க முடியவில்லை.

காங்கிரஸ் பிற கட்சிகளோடு கூட்டணியை உருவாக்கி பெரும்பான்மையை நிரூபித்துவிட்டதால் பாஜக அரசு அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த ஒரேயொரு முறை மட்டுமே வாக்குப்பதிவுக்கு பின்னர் வெளியான கருத்துக்கணிப்புகளுக்கு வெகுநெருக்கமாக தேர்தல் முடிவுகளும் வந்திருந்தன.

வாக்களிப்புக்கு பிந்தைய கணிப்புகள் துல்லியமானவையா?

பட மூலாதாரம், Getty Images

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் துல்லியத்தின் விகிதாசாரத்தை கணக்கீடுவது மிகவும் கடினமானது.

ஆனால், கணிக்கப்படுகின்ற தொகுதிகள், அரசு அமைக்க போகும் கட்சிக்கு கிடைக்கின்ற நேரடி விகிதாசாரமாக இருப்பதில்லை என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. எப்போதும் இதில் தவறு இருக்க வாய்ப்புள்ளது.

கணிப்பில் தவறு

2015ம் ஆண்டு பிகாரில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில், 155 தொகுதிகளை பாஜக வெல்லும் என்றும், மஹா-காத்பந்தன் 83 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் சானக்கியா கணித்து வெளியிட்டிருந்தது.

நீல்சன் மற்றும் சிசிரோ, பாஜக 100 தொகுதிகளுக்கு மேலாக வெற்றி பெறும் என்று கூறியிருந்தது. ஆனால், வாக்கு எண்ணப்பட்ட பின்னர் வெளியான முடிவுகள் நேர் எதிரானதாக இருந்தது.

இலங்கை
இலங்கை

நிதிஷ் குமாரின் ஜேடி(யு) மற்றும் லாலு யாதவின் ஆர்ஜேடி மகா கூட்டணியான மஹா-காத்பந்தனும், காங்கிரஸூம் சேர்ந்து மொத்தம் 234 தொகுதிகளில் 178 தொகுதிகளில் வென்றிருந்தன.

இது மொத்த தொகுதிகளில் சுமார் 73 சதவீதமாகும். இந்த சமயத்தில்தான் வெற்றிபெறுவோரையும், தோல்வி அடைவோரையும் கணிப்பதில் செய்த தவறு விகிதாசாரம் மிகவும் அதிகமானதாக இருந்தது.

சரியான கணிப்பு

2016ம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் முடிவுகள் சரியாக அமைந்திருந்தன.

வாக்களிப்புக்கு பிந்தைய கணிப்புகள் துல்லியமானவையா?

பட மூலாதாரம், Getty Images

திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி தட்டுதடுமாறி 210 தொகுதிகளை பெறலாம் என்று சானக்கியா கணித்திருந்த நிலையில், இந்தியா டுடே-ஆக்ஸிஸ் அவர் 243 தொகுதிகளில் வெல்வார் என்று கணித்தது.

இவ்வாறு கணிக்கப்பட்டிருந்த தொகுதிகள், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கு தேவையான தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கருத்துக்கணிப்புதான், மம்தா பானர்ஜிக்கு கிடைக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த எண்ணிக்கைக்கு மிகவும் நெருக்கமாக சென்றிருந்தது. அவர் 211 தொகுதிகளில் வென்றிருந்தார்.

ஆனால், தோல்வி அடைகிற கட்சி பெறுவதாக கணிக்கப்பட்டிருந்து தொகுதிகளில் தவறான அனுமானங்கள் ஏற்பட்டிருந்தன.

இந்தியா டுடே-ஆக்ஸிஸ் தவிர, பிற அனைத்து கணிப்புகளும் இடது சாரி மற்றும் காங்கிரஸ் கூட்டணி 100க்கு மேலான தொகுதிகளில் வெல்லும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கூட்டணி வெறுமனே 44 தொகுதிகளில் வென்றிருந்தது.

2017ம் ஆண்டு நடைபெற்ற உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில், எல்லா வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களும் பாஜக மாபெரும் வெற்றியடையும் என்று வெளியிட்டிருந்தன.

பாஜக 285 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று சானக்கியா தெரிவித்திருந்த நிலையில், முடிவுகள் வெளிவந்தபோது, யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு இந்த கணிப்பிலிருந்து 7 தொகுதிகளில் அதிகமாக பெற்றிருந்தது. சமாஜ்வாடி கட்சி கூட்டணி 88 முதல் 112 தொகுதிகள் வரை பெறலாம் என்று சானக்கியா கூறியிருந்தது.

வெற்றியடையும் கட்சிகள் அல்லது கூட்டணிக்கு மிகவும் நெருங்கியதாக தொகுதிகள் அறிவிக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவுக்கு பிந்தைய அரிய கருத்துக்கணிப்புகள் இவை. ஆனால், தோல்வி அடைவோர் பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை சரியாக கணிக்கப்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: