கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக நியமனம்

பட மூலாதாரம், FACEBOOK/ISB
இந்தியாவின் புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பணியில் தொடர்வார்.

பட மூலாதாரம், Twitter/Ministry of Finance
கடந்த ஜூலை மாதம் பணியில் இருந்து அரவிந்த் சுப்ரமணியன் "தனிப்பட்ட காரணங்களுக்காக" என்று கூறி விலகியதையடுத்து தற்போது இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹைதராபாதில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்லூரியில் இணைப் பேராசிரியராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் பணியாற்றி வருகிறார். ஐஐடி மற்றும் ஐஐம் முன்னாள் மாணவரான இவர், சிகாகோ பூத் தொழில் பள்ளியில் பி எச்டி பெற்றுள்ளார்.
கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், வங்கி, கார்ப்பரேட் நிர்வாகம் மற்றும் பொருளாதார கொள்கை ஆகியவற்றில் வல்லுநராவார்.
செபியின் நிலைக்குழு உறுப்பினராகவும் இவர் உள்ளார்.
இவரது பணி நியமனம் ஒப்பந்த அடிப்படையிலானது என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












