'வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துங்கள்' : தெலுங்கில் ட்வீட் செய்த பிரதமர் மோதி

வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துங்கள்'

ஒவ்வொருவரும் தங்களின் வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த வேண்டும் என்றும் முக்கியமாக இளைஞர்கள் வாக்களிக்க முன்வர வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தெலுங்கு மொழியில் அவர் ட்வீட் செய்துள்ளார்.

பிரதமர் மோதி

பட மூலாதாரம், TWITTER

இந்திய நாடாளுமன்ற மக்களவைக்குப் பொதுத் தேர்தல் நடக்க இன்னும் ஐந்து மாதங்களே இருக்கும் நிலையில், தற்போது ஐந்து மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான, ஓர் அரையிறுதிப் போட்டியாகவே பார்க்கப்படுகிறது.

மத்தியபிரதேசம், சத்திஸ்கர், மிசோராம் ஆகிய மாநிலங்களில் நவம்பர் மாதம் வாக்குப்பதிவு நடந்த நிலையில், தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு நடந்தது.

வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கிய தெலங்கானா சட்டசபை தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்தன. பகல் வரை வரை 47.8 சதவீத வாக்குகள் பதிவாகின.

32,574 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது,. மொத்தம் 119 தொகுதிகளில் 1,821 வேட்பாளர்கள் இதில் போட்டியிடுகின்றனர்.

தேர்தலில் வாக்களித்த பி.வி. சிந்து
படக்குறிப்பு, தேர்தலில் வாக்களித்த பி.வி. சிந்து
நாகார்ஜூனா

பட மூலாதாரம், TWITTER / NAGARJUNA AKKINENI

தெலங்கானாவில் சட்டம் ஒழுங்கு முறையாக இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி ரஜத் குமார் தெரிவித்தார்.

இந்நிலையில் வாராங்கல் மாவட்டத்தில் வாக்களிக்க வரிசையில் நின்ற 60 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாக்களிக்க சென்ற பலரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

தன்னிடம் வாக்காளர் அட்டை இருந்தும், வாக்காளர் பட்டியலில் தன் பெயர் இல்லாததால், வாக்களிக்க முடியாமல் வீடு திரும்பியதாக ஐபிஎஸ் அதிகாரியான கிருஷ்ண பிரசாத் ட்வீட் செய்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

அதே போல தன் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை என பேட்மின்டன் வீராங்கனை கட்டா ஜ்வாலா ட்வீட் செய்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

வாக்குப்பதிவு

பட மூலாதாரம், FACEBOOK / CHIEF ELECTORAL OFFICER TELANGANA

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :