கேரள பழங்குடி முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் வரை - கடந்த வாரம் நடந்தது என்ன?

பெரும் நலச்சரிவுக்குப் பின்னும் கேரள காட்டைவிட்டு செல்ல மறுக்கும் பழங்குடி குடும்பம், இந்திய கிர் சிங்கங்களின் தொடர் மரணங்கள், அம்பேத்கர் இட ஒதுக்கீடு குறித்து கூறியது, உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ரோஹிஞ்சா முஸ்லிம்களை நாடு கடத்திய இந்தியா, மணமாகாத ஆண் சந்திக்கும் அனுபவங்கள், உச்சநீதிமன்ற நீதிபதியாக பிரெட் கேவனோ குறித்த செய்திகள் கடந்த வாரம் பிபிசி தமிழில் பரவலாக வாசிக்கப்பட்டு பகிரப்பட்டது.

கடந்த வாரம் பிபிசி தமிழில் வெளியான முக்கிய செய்திகளின் இணைப்பை இங்கே பகிர்கிறோம்.

கேரள பழங்குடியின் ஆச்சரியமூட்டும் வாழ்க்கை

கேரளாவில் ஆகஸ்ட் 2018 வெள்ளத்தின் போது நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் குடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். ஆனால், நிலச்சரிவுகளால் அதிகமாக பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டம் மேப்பாடி மலையில் வசித்துவரும் சோழநாயக்கர் இனத்தைச் சேர்ந்த செரிய வெளுத்தா என்ற ஆதிவாசி முதியவர் வனத்திலிருந்து வெளியேறவில்லை.

"சொந்தமாக கார் கூட இல்லை" - யார் இந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்?

63 வயதாகும் ரஞ்சன் கோகாய் இந்திய உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றுள்ளார். அவரை பற்றிய சில முக்கிய தகவல்களை தெரிந்துகொள்வோம்.

மாணிக்கவாசகர் புத்தகம்: சைவ சித்தாந்த பேராசிரியரை இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பது ஏன்?

மாணிக்கவாசகர் குறித்து எழுதப்பட்ட ஒரு புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்துகள் ஏற்புடையவை அல்ல என்பதால் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன.

7 ரோஹிஞ்சா முஸ்லிம்களை நாடு கடத்திய இந்தியா மீது விமர்சனம்

7 ரோஹிஞ்சா முஸ்லிம்களை இன்று வியாழக்கிழமை மியான்மருக்கு நாடு கடத்தியுள்ளது இந்தியா. அப்படிச் செய்வது அவர்களை ஆபத்துக்குள்ளாக்கும் என்ற கடைசி நேர எச்சரிக்கையை இந்தியா செவிமடுக்கவில்லை. இதனால் இந்தியா விமர்சனங்களுக்கு ஆளாகிறது.

'என் உடலின் விருப்பமும், உணர்வும் நீங்கள் விரும்புகிற மாதிரி ஏன் இருக்க வேண்டும்?' #beingme

உங்கள் கைகளில் ரத்தம் படிந்த கத்தியும், அரிவாளும் இருப்பதை அறிந்துகொண்டே, இந்த நொடி நான் உங்கள் முன் நிற்கிறேன். எந்தவித சலனமும் இல்லாமல் உங்களை உற்றுப் பார்க்கிறேன். சில கேள்விகளை முன்வைக்கிறேன். 'நான்' மாலினி ஜீவரத்தினம். இயக்குநர், மனித உரிமை செயற்பாட்டாளர்.

ஊடகத்துறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக குரல் கொடுக்கும் பெண் பத்திரிகையாளர்கள் #MeToo

எந்தத் துறையாக இருந்தாலும், அதில் பெண்கள் சாதிக்க வேண்டும் என்றால், ஆண்களை காட்டிலும் சற்று தீவிரமாக இருக்க வேண்டியிருக்கும். பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் சவால்களும் அதிகமே. பல இடங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தாக்குதல்களை எல்லாம் தாண்டிதான் வேலை செய்ய வேண்டியுள்ளது. இதில் ஊடகத்துறையும் விதிவிலக்கல்ல.

மணமாகாத ஆண் சந்திக்கும் அனுபவங்கள் #HisChoice

''நீ ஒரு முட்டாளாதான் இருக்கணும். இன்னமுமா பழைய காதலையே நினைச்சிட்டு இருப்ப, நிகழ்காலத்தோட வாழ பழகு'' எனது திருமணம் குறித்து மீண்டும் வலியுறுத்திய என நண்பன் கூறிய ஆலோசனை இது.

'கிர்' சிங்கங்கள் தொடர்ந்து உயிரிழப்பு: காரணம் என்ன?

கிழக்கு ஆஃப்பிரிக்காவில் இருந்த சிங்கங்கள் 30 சதவீதம் இறக்கக் காரணமாக இருந்த ஒரு வகை வைரஸ், இந்திய கிர் சிங்கங்களையும் தாக்கி உள்ளதா?

'திருவிழா, போராட்டம்' - இப்படித்தான் இருந்தது கடந்தவார உலகம்

கடந்த வாரம் உலகளவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை புகைப்படங்களாக தொகுத்து வழங்குகிறோம்.

பிரிட்டிஷ் இந்தியாவில் சென்னை: புகைப்பட அஞ்சல் அட்டைகள் கூறும் இனவாத கதைகள்

20ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் பிரிட்டீஷ் இந்தியாவில் இருந்து ஐரோப்பா சென்ற புகைப்பட அஞ்சலட்டைகள், இந்தியாவில் இருந்த தங்கள் உறவினர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ஐரோப்பியர்களுக்கு உதவியது.

டிரம்பிற்கு முக்கிய வெற்றி: அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியானார் பிரெட் கேவனோ

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக பிரெட் கேவனோவை அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிறுத்தியதை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த சர்ச்சை டிரம்பிற்கு ஆதரவாக முடிவுக்கு வந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: