தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு:"எந்தவித தலையீடும் இல்லாமல் விசாரணை நடத்தப்படும்"
முந்தைய விசாரணை ஆணையம் போல் இருக்காது முழுக்க முழுக்க யாருடைய தலையீடும் இல்லாமல் நேர்மையாகவும்,நம்பகதன்மையுடனும்,வெளிப்படையாகவும் விசாரணை நடத்தப்படும் என நான் உறுதியளிப்பதாக அருணா ஜெகதீசன் தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், தமிழக அரசு ஒரு நபர் விசாரணை கமிஷனை அமைத்துள்ளது.
இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து விசாரணை நடத்தியபின் செய்தியாளர்களை சந்தித்த அருணா ஜெகதீசன், முந்தைய விசாரணை ஆணையம் போல் இருக்காது முழுக்க முழுக்க யாருடைய தலையிடும் இல்லாமல் நேர்மையாகவும்,நம்பகதன்மையுடன்,வெளிபடையாக நடத்தப்படும் என நான் உறுதியளிப்பதாக தெரிவித்தார்.
மேலும், "பொதுமக்கள் எந்த விதமான அச்சமுமிண்றி ஆஜராகி நேரில் விளக்கமளிக்கலாம், பாதிக்கப்பட்ட நபர்கள் சமர்பிக்கும் ரகசியங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்." என்றும் அவர் தெரிவித்தார்.

"துப்பாக்கிச் சூடு குறித்து வீடியோக்கள் இருந்தால் அவை எடிட் செய்யாமல் ஒரு வாரத்திற்குள் அளிக்கலாம். எடிட் செய்யாத வீடியோக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.
"இந்த விசாரணை மூன்று கட்டமாக நடத்தப்படும், முதற்கட்டமாக மக்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தப்படும். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நபர்களும் விசாரணை செய்யப்படுவார்கள். இரண்டாம் கட்டமாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், பத்திரிகையாளர்கள் சமூக ஆர்வலர்கள் வீடியோ எடுத்தவர்களிடம் விசாரணை நடத்தப்படும்; மூன்றாவது கட்டமாக காவல்துறையினரிடம் விசாரணை நடத்தப்படும்" என்று தெரிவித்தார் அருணா ஜெகதீசன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












