இணையத்தில் தகவலைத் திருடி தேர்தலில் வெல்ல முடியுமா?

    • எழுதியவர், ப்ரக்யா மானவ்
    • பதவி, பிபிசி

பயனாளிகளின் அனுமதியுடன் அரசு சாராத திறன்பேசி செயலி மூலம் கிடைக்கும் தகவல்களை ஒரு தனியார் நிறுவனத்திடம் பகிர்ந்துகொண்டால் அதில் சட்டவிரோதமானது எதுவும் இல்லை.

மோதி

பட மூலாதாரம், Getty Images

இப்போது பிரதமர் நரேந்திர மோதியின் நமோ செயலியின் தரவுகள் ஒரு தனியார் நிறுவனத்திடம் பகிரப்பட்டது விவாதப் பொருளாகியுள்ளது.

இந்த குற்றச்சாட்டை பாரதிய கட்சி மறுத்துள்ளது. எனினும், செயலி அல்லது சமூக ஊடகங்களில் கொடுக்கப்படும் தகவல்களைக் கொண்டு ஒரு அரசியல் கட்சி தேர்தலில் தாக்கம் செலுத்த முடியுமா எனும் கேள்வி எழுகிறது .

இது என்கிறார் 'மீடியானமா' (Medianama) எனும் இணையதள பதிப்பு நிறுவனத்தின் ஆசிரியர் நிகில் பாவா.

"2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குச்சாவடிக்கு செல்லாமலேயே இணையதளம் மூலம் வாக்களிக்கலாம் என்று ஒரு போலி இணையதளத்தில் இருந்து சில ஆப்பிரிக்க வம்சாவளி அமெரிக்கர்களுக்கு மின்னஞ்சல் வந்தது. அதை நம்பி வாக்களித்தவர்கள் அனைவரின் வாக்குகளும் வீணாகிப் போயின," என்கிறார் நிகில்.

"இது வரை பாரதிய ஜனதா அந்தத் தகவல்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. எனினும், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா விவகாரம் வெளியாகியுள்ள இந்த சூழலில் இது குறித்து நாம் கவலைப்பட வேண்டியுள்ளது," என்று அவர் கூறுகிறார்.

பிரிட்டிஷ் நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா 2016இல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் தாக்கம் செலுத்தும் நோக்கத்துடன் பல லட்சம் மக்களின் தரவுகளை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தனிநபர்களின் அந்தரக தரவுகளை திருடியதா பிரதமர் மோதியின் நமோ செயலி?

பட மூலாதாரம், NAMO

அந்த நிறுவனம் தனிமனித ஆளுமையை சோதிக்கும் ஒரு புதிர் விளையாட்டை நடத்தியபோது, அதில் பங்கேற்பதற்காக பல லட்சம் ஃபேஸ்புக் பயனாளிகள் தங்கள் தனிப்பட்ட தரவுகளை பகிர்ந்தனர்.

"யார் வெளிப்டையானவர், யார் பேச தயங்குபவர், பெயர், முகவரி, இனம் எல்லாம் இதன்மூலம் தெரிய வரும். இது உங்களுக்கு எதிரானவர்களை கண்டறிந்து, வதந்திகளை பரப்ப உதவும். ஒரு குறிப்பிட்ட குழுவை இலக்கு வைத்து, ஒரு தலைவர் சொன்னதாக பொளிச் செய்தியை அனுப்ப முடியும் அல்லது இன்னொரு தலைவருக்கு எதிரான செய்திகளை பரப்ப முடியும்," என்கிறார் நிகில்.

உதாரணமாக ஹிலாரியை பில் கிளிண்டன் சந்தேகிப்பதாக அவரது ஆதரவாளருக்கு செய்தி அனுப்ப முடியும்.

உங்கள் நிலைத்தகவல், செய்தி, பின்னூட்டம் ஆகியவற்றில் நீங்கள் பதிவுதான் மூலம் உங்களை பற்றி அறிய முடியும் என்று கூறும் நிகில், ஒரு நபரின் நாடு மற்றும் மொழி மீதான அபிமானத்தை பிறர் மீதான வெறுப்புக்காக பயன்படுத்த முடியும் என்கிறார்.

தகவல்களை திரட்டுவதும், அவற்றை மாற்றுவதும் அரசியலில் மிகவும் உதவியாக இருக்கும்.

நாட்டா டேட்டா எனும் நிறுவனத்தின் நிறுவனர் எச்.ஆர்.வெங்கடேஷ், "பயனாளிகளின் தரவுகளை எந்த அளவுக்கும் பயன்படுத்தலாம். அரசியல் கட்சிகளுக்கு போதிய பணம் இருந்தால் போதும்," என்கிறார்.

ஃபேஸ்புக்

பட மூலாதாரம், Getty Images

இணைய குற்றங்களின் முன்னணி வழக்கறிஞர் விராக் குப்தா அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியாது என்கிறார்.

"தற்போது எல்லா அரசியல் கட்சிகளும் ஒரு இணையதள படையையே உருவாக்கியுள்ளன. அவற்றில் வெளிப்படைத்தன்மை இல்லை. அவர்கள் தரவுகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதையும் அறிய முடியாது," என்கிறார் அவர்.

வெளிச்சம் தருவதற்கான செயலிகளுக்கு எதற்கு நம் தரவுகளை பெறுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும் என்கிறார் நிகில். எல்லா செயலிகளுக்கும் நம் செல்பேசியில் உள்ள தொடர்புகளை பார்க்க அனுமதி வழங்க கூடாது என்றும், ஒலிவாங்கி மற்றும் கேமரா ஆகியவற்றுக்கான அனுமதியை வழங்கும்போது கவனம் வேண்டும் என்கிறார்.

தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

"ஒரு செல்பேசியில் 17-20 செயலிகளை சேமிக்கலாம். ஆனால் மக்கள் பல செயலிகளை பதிவிறக்கவும் அழிக்கவும் செய்கின்றனர். தங்கள் செல்பேசியில் உள்ள தரவுகள் அந்த செயலிகளுக்கு செல்வதை அவர்கள் உணர்வதில்லை. ஃபேஸ்புக் கணக்கில் உங்களைப் பற்றிய குறைவான தகவல்களையே கொடுங்கள். பொருட்களை வாங்கும்போது உங்கள் செல்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை வழங்குவதை தவிர்க்க வேண்டும்," என்கிறார் அவர்.

மென்பொருள் மூலம், மால்வேர், போலிச் செய்தி, ஏமாற்று செய்தி ஆகியவற்றுக்காக ஜிமெயில் மூலம் உள்வரும் மின்னஞ்சல்கள் பரிசோதிக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.அவ்வாறு உங்கள் தரவுகளை சேகரிக்க தேவையில்லாமல் அனுமதிகோரும் செயலிகளை தவிர்த்துவிடவேண்டும் என்று கூறுகிறார் வெங்கடேஷ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :