'மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது ஆர்.கே.நகர் முன்னணி நிலவரம்' : தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்துவரும் சுயேச்சை வேட்பளர் டிடிவி தினகரன் தேர்தல் முடிவுகளை தான் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் கூறுகையில், ''தமிழகத்தில் நடைபெற்றுவரும் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற தமிழக மக்களின் எண்ணத்தை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் நிறைவேற்றியுள்ளனர் என்று கூறினார்.
''இந்த ஆட்சி குறித்து நான் முன்பு கூறியது உண்மை என்பது தற்போது தெரிய வருகிறது'' என்று கூறிய டிடிவி தினகரன், தமிழகத்தில் நடைபெற்றுவரும் இந்த ஆட்சி இன்னும் 3 மாதத்தில் கவிழ்ந்துவிடும் என்றும் கூறினார்.
''எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தலைமை வகித்தபோது அதிமுகவின் சின்னமாக இருந்த இரட்டை இலை சின்னம், தற்போது யார் கையில் உள்ளது என்பதை மக்கள் கருத்தில் கொள்வர்; அதை மனதில் வைத்தே மக்கள் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர்'' என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் ''ஜெயலலிதாவுக்கு பிறகு யார் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினராக வரவேண்டும் என்பதை அத்தொகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர் என்பதையே இந்த முன்னணி நிலவரம் காட்டுகிறது'' என்று அவர் கூறினார்.
பிற செய்திகள்
- LIVE: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - டிடிவி தினகரன் 10,421 வாக்குகள் பெற்று முன்னிலை
- இன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு – 10 பின்னணி தகவல்கள்
- திரைப்படத்தில் உருவத்தையும், நிறத்தையும் கேலி செய்வது முறையா?
- பிலிப்பைன்ஸ்: வெப்பமண்டல புயலால் 180க்கும் மேற்பட்டோர் பலி
- ஜெருசலேம் பற்றிய இந்த 6 தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








