பள்ளியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இந்திய பெண், கருக்கலைப்புக்குப் பிறகு ஆபத்தான நிலையில்
பள்ளியில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களால், மூன்று மாதங்களுக்கு மேலாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பதின்ம வயதுப் பெண், கட்டாய கருக்கலைப்பு செய்யப்பட்டதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
பிபிசி ஹிந்தி குழுவிடம் பேசிய மருத்துவர்கள், மாணவியின் மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினர். காவல்துரையினர், ராஜஸ்தானில் உள்ள அந்தப் பள்ளியின் இயக்குநரையும், ஆசிரியரையும் கைது செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள், அந்த மாணவியை ஒரு தனியார் மருத்துவமனையில், கட்டாய கருகலைப்பிற்கு உட்படுத்தியுள்ளனர். அதைத் தொடர்ந்து அவர் சுயநினைவை இழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் , குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையின் பங்கு என்ன என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
18 வயதாகும் அந்த பெண், கடுமையான வயிற்று வலி காரணமாக , மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது, பள்ளி ஊழியர்கள், அப்பெண் கருவுற்றிருப்பதை அறிந்துள்ளனர்.
கருக்கலைப்பு நடந்தவுடனேயே அந்த பெண்ணின் உடல்நிலை மோசமடைந்ததாக கூறும், ஷிகார் காவல்துறையினர், எந்த இடத்தில் தவறு நடந்தது என தெரியவில்லை என்றனர்.

தற்போது, அந்தப் பெண் சுயநினைவின்றி உள்ளார்.
இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாயன்று சம்மந்தப்பட்ட பள்ளியின் வாசலில், பல போராட்டங்களும் நடைபெற்றன.
ஷிகரில் உள்ள அந்த பள்ளி, அதிகாரிகளால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பள்ளி நேரங்களை தாண்டி, கூடுதல் வகுப்புகள் உள்ளதாக போலியான காரணங்களை கூறி, அந்தப் பெண்ணை பள்ளிக்கு வரவழைத்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவரிடம் தவறாக நடந்துகொண்டு இருக்கலாம் என நம்புவதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை இன்னும் காவல்துறையினரால் பெற முடியவில்லை.
இது மிகவும் தீவிரமான பிரச்சனை. மேலும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி குஷால் சிங் தெரிவித்தார்.
பிற செய்திகள்
- இலவச சேலைகளை தீயிட்டுக் கொளுத்தி கொந்தளிக்கும் தெலங்கானா பெண்கள்
- நவராத்திரியின் போது சன்னி லியோனின் 'ஆணுறை' விளம்பரம் : குஜராத்தில் கொதிப்பு?
- பெரும் உயிர்த் தியாகத்துடன் டோக்ரை யுத்தத்தை வென்றது இந்தியா
- தெருவில் பெண் சிறுநீர் கழித்த பிரச்சனை, உரிமைப் போராட்டமாக வெடித்த சுவாரஸ்யம்!
- இணைய அழைப்புகள் மீதான தடையை நீக்குகிறது செளதி அரேபியா
- நுரையீரல் புற்றுநோய் நோயாளியின் வாழ்நாளை அதிகரிக்கும் மருந்துக்கு அனுமதி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












