இலவச சேலைகளை தீயிட்டுக் கொளுத்தி கொந்தளிக்கும் தெலங்கானா பெண்கள்
"இந்த சேலை நான்கு நாள் தாக்குப்பிடிக்குமா என்பதே சந்தேகம்". இலவச சேலையை பெற்றுக் கொண்ட கங்கா என்ற பெண், பிபிசி தெலுங்கு செய்தியாளர் பல்லா சதீஷிடம் அரசின் மீது வெறுப்போடு சொன்ன வார்த்தைகள்.

பண்டிகை காலத்தை ஒட்டி, தென்னிந்திய மாநிலமான தெலங்கானாவில், மாநில அரசு பெண்களுக்கு இலவச சேலைகளை வழங்கும் திட்டம், அரசுக்கு எதிரான கொந்தளிப்பைத் தூண்டிவிடும் எதிர்மறையாக மாறிவிட்டது.
அரசாங்கம் வாக்குறுதி அளித்தபடி கைத்தறி சேலைகளை வழங்கவில்லை என்பது தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அம்மாநில பெண்கள் தெரிவித்துள்ளனர்.
தெலங்கான அரசு இத்திட்டத்தில் 1 கோடி சேலைகளை வாங்குவதற்கு 220 கோடி ரூபாய் நிதியை (2.2 பில்லியன்) ஒதுக்கியது.
திருவிழா கொண்டாட்டத்துக்கு...
பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படும் சேலைகள், அம் மாநிலத்தில் பிரபலமான உள்ளூர் திருவிழாவான பத்துகம்மாவை மக்கள் கொண்டாடுவதற்கு அரசாங்கத் திட்டத்தின் ஒரு பகுதி ஆகும்.
சேலைகள் அனைத்தும் உயர் தரம் கொண்டவை என்றும் மக்கள் அதை மாற்றிக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு இத்திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கி மலிவான தரம் கொண்ட புடவைகளை வழங்கியுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் இதனை "புடவை ஊழல்" என்று கூறி இதற்கு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மாநிலத்தில் நெசவாளர்களிடமிருந்து சேலைகளை வாங்குவதாக அதிகாரிகள் முதலில் கூறினர், இது பிராந்தியத்தின் கைத்தறித் தொழிற்துறையை ஊக்குவிக்கும் என்று தெரிவித்தனர்.
ஆனால், கைத்தறி சேலைகள் விழாக்காலத்துக்குள் தயார் செய்வது சாத்தியமில்லை என அவர்கள் எண்ணியதால், விசைத்தறியால் நெய்யப்பட்ட சேலைகளை வாங்க முடிவு செய்தனர்.
"அவர்கள் கொடுப்பதை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்" என்று தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் ஒரு மையத்தில் சேலையை பெற்றுக்கொண்ட பின் பத்மா என்ற பெண், பிபிசியிடம் தெரிவித்தார்.
கைத்தறி சேலைகள் அல்ல
மேலும் இவை கைத்தறி சேலைகள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இவை கைத்தறி சேலைகள் அல்ல, அவர்கள் தான் அவ்வாறு கூறுகிறார்கள் என்று அவர் கூறினார்.
பெண்கள் சேலைக்குவியலை தீ வைத்து எரித்து, மலிவான, தரமற்ற இந்தப் புடவைகளை யார் அணிவார்கள் என்று கோபமாக கூறுவது போன்ற வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது.
இந்த வீடியோக்களின் பின்னணியில் எதிர்க்கட்சிகள் இருப்பதாக தெலங்கானா அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. ஏனெனில் சேலைகளை எரித்தல் என்பது இந்திய கலாசார நடைமுறை அல்ல என்றும் அரசு கூறியுள்ளது.

இருப்பினும், மோசமான தரம் கொண்ட சேலைகளால் தாங்கள் வருத்தமடைந்திருப்பதாக சில பெண்கள் என்று கூறி வருகின்றனர்.
இந்த புடவையின் மதிப்பு 70 முதல் 75 ரூபாய் வரை இருக்கும் என்றும் இது இலவசமாக கிடைப்பதால் மகிழ்ச்சியே என்றும் சாவித்ரி என்பவர் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












