சர்ச்சைக்குரிய 'நீட்' கடந்து வந்த பாதை

தமிழக்கத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நீட் தேர்வு கடந்து வந்த பாதையின் தொகுப்பு இது.

நீட் கடந்து வந்த பாதை

பட மூலாதாரம், MANPREET ROMANA/AFP/getty images

2013 ஆம் ஆண்டு முதல் முறையாக நீட் தேர்வு தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா உட்பட பல மாநிலங்கள் நீட் தேர்விற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன. கல்வி இணக்கப் பட்டியலில் ( Concurrent List) வருவதால் தங்கள் அதிகார வரம்பில் தலையிடுவது போன்று ஆகும் என சில மாநிலங்கள் வாதிட்டன.

ஜூலை, 2013: ஆம் ஆண்டு நீட் தேர்வு அரசியலமைபிற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் கூறியது.

ஏப்ரல், 2016: ஆம் ஆண்டு நீட் தேர்விற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது.

மே, 2016: தான் ஆட்சிக்கு வந்தால் நீட்டிற்கு எதிரான சட்டம் கொண்டு வரப்படும் என தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்த ஜெயலலிதா, நீட்டிற்கு எதிராக பிரதமர் மோதிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

மே 7, 2017: ஆம் ஆண்டு நீட் தேர்வு நடைபெற்றது இதில் மாணவ மாணவியர் கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் என சர்ச்சைகள் கிளம்பின.

மே 26, 2017: நீட் தேர்வில் ஆங்கிலம் மற்றும் பிற மொழி கேள்விகள் வேறாக இருந்தன என தொடரப்பட்ட வழக்கில் நீட் தேர்விற்கான முடிவுகளை வெளியிட கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைகால உத்தரவு பிறப்பித்தது.

ஜூன் 12, 2017: நீட் முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

தொடர்புடைய செய்திகள்:

ஜூன் 23, 2017: ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன

ஜூலை 14, 2017: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான சேர்க்கையின்போது, மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் மாநில அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்பட்டது.

ஜூலை 25, 2017: நீட் முறையில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

ஆகஸ்டு 13, 2017: தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களுக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் அவசரச் சட்டம் கொண்டுவந்தால், அதற்கு ஒத்துழைக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்:

ஆகஸ்டு 14, 2017: நீட் தேர்வு முறையில் இருந்து நடப்பு கல்வியாண்டில் மட்டும் விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்டத்தின் வரைவை மத்திய அரசின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது.

ஆகஸ்டு 22, 2017: நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது; மேலும் நீட் தேர்வு அடிப்படையிலேயே மாணவர்களுக்கான சேர்க்கையை வரும் செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

ஸ்டு 23, 2017: மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.

செப்டம்பர் 1, 2017: நீட்டிற்கு எதிராக வழக்கு தொடர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :