முதல்வர் ராஜிநாமாவை வலியுறுத்தும் கமலின் டிவீட்டுகளால் புதிய சர்ச்சை

பட மூலாதாரம், Twitter
தனது அரசில் நிகழும் தவறகளுக்கும் ஊழலுக்கும் பொறுப்பேற்று ஒரு மாநில முதல்வர் பதவி விலக வேண்டுமானால் இன்னும் ஏன் அத்தகைய குரலை தமிழகத்தில் எந்த கட்சியும் எழுப்பவில்லை என்று கேள்வி எழுப்பி தனது டிவிட்டரில் நடிகர் கமல் ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் தனது டிவிட்டரில், "சிறந்த தமிழகமே எனது நோக்கம். எனது குரலுக்கு வலுசேர்க்க யாருக்கு துணிவுள்ளது? திமுக, அதிமுக மற்றும் அரசியல் கட்சிகள் உதவி செய்வதற்கான கருவிகளே. அந்தக் கருவிகள் மழுங்கிப் போயிருந்தால் மற்றதைத் தேடுவோம்" என்று கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Twiitter
நடிகர் கமல் ஹாசன் இந்தடிவீட்டுகளை பதிவிட்ட சுமார் 30 நிமிடங்களுக்குள் அவற்றை ஆயிரக்கணக்கில் அவரை டிவிட்டரில் பின்தொடருவோர் மறுடிவீட் செய்தனர். அவரது கருத்துக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கில் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கமல் ஹாசன் தொடர்ச்சியாக மூன்றாவதாக பதிவு செய்த டிவீட்டில், "சுதந்திரம், ஊழலிருந்து நாம் பெறாதவரையில் இன்றும் நாம் அடிமைகளை. புதிய சுதந்திரப் போராட்டத்துக்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும் வெல்வோம்" என்றும் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Twitter
பெரும்பாலான டிவிட்டர் பயன்பாட்டாளர்கள் "உங்களுடன் வர நாங்கள் தயார்" என்று கூறி பதிவிட்டு வருகின்றனர்.

பட மூலாதாரம், Twitter
நாட்டின் சுத்நதிர தினம் இன்று கொண்டாடப்படும் வேளையில் சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசனின் டிவிட்டர் பதிவுகள், தமிழக அரசியலில் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பிற செய்திகள்:
- வடகொரியாவின் தாக்குதல் திட்டத்தை ஆய்வு செய்தார் கிம் ஜாங்-உன்
- இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன பதவியேற்பு
- "கேம் ஆஃப் த்ரோன்ஸ்" தொலைக்காட்சி தொடர் கசிவு: மும்பையில் நால்வர் கைது
- இந்தியா-சீனா பதற்றத்தின் பின்னணி என்ன?
- குண்டுகளும் வசைகளும் காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவராது: மோதி சுதந்திர தின உரை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












