குண்டுகளும் வசைகளும் காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவராது: மோதி சுதந்திர தின உரை
குண்டுகளும் வசைகளும் காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவராது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், DD News
இந்தியா தமது 70 ஆண்டுகால சுதந்திரத்தைக் கொண்டாடி வரும் நிலையில் தில்லியில் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய மோதி, காஷ்மீர் பிரிவினைவாதிகள் ரகசியத் திட்டத்தோடு செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட காஷ்மீர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பல தசாப்த கால எல்லைத் தகராறுகளின் மையமாக இருந்து வருகிறது.
இந்திய பாதுகாப்புப் படைகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல் நிகழும் காஷ்மீரில் "தழுவல்கள்" மட்டுமே தீர்வை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார் மோதி.
பாகிஸ்தான் சுதந்திர தினத்துக்கு அடுத்த நாளான இன்று, இந்தியா தமது 70வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறது.
காஷ்மீரிகள் தாங்கள் இழந்த சொர்க்கத்தை மீட்க இந்தியர்கள் அனைவரும் உறுதுணையாக நிற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் மோதி.
உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் பொது மருத்துவமனை ஒன்றில் இறந்துபோன 60 குழந்தைகளின் குடும்பங்களுக்கு உறுதுணையாக தேசம் நிற்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மருத்துவமனை பணம் கட்டாமல் விட்ட காரணத்தால் ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதன் விளைவாக, அந்தக் குழந்தைகள் இறந்தன.
உடனடி திருமண விலக்கு பெற்றுத்தரும் முத்தலாக் முறைக்கு எதிராகப் போராடிவரும் முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவாகவும் மோதி கருத்துத் தெரிவித்தார்.
'தலாக்' என்னும் சொல்லை மூன்று முறை உச்சரிப்பதன் மூலம், சில நிமிடங்களில் முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவியை மணவிலக்கு செய்யும் சாத்தியம் உள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இது தொடர்பான வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் விரைவில் உத்தரவு வழங்க உள்ளது.
மதத்தைப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டுவதையும் மோடி விமர்சித்தார்.
2014-ல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, பசுவைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொள்வோர் மாடுகளைகளைக் கடத்துவதாக சந்தேகிப்போர் மீது தாக்குதல்கள் தொடுத்துவருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் ஒரு டஜன் கொலைகள் பசுவின் பெயரால் நிகழ்த்தப்பட்டுள்ளன. பாலுக்காக மாடுகளை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு ஏற்றிச்செல்லும் முஸ்லிம்கள்கூட தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.
இதையும் படிக்கலாம்:
- மனித இனத்தை காக்கப்போகும் மரபணு மாற்றப்பட்ட பன்றிகளின் உடலுறப்புகள்
- வைட்டமின் பி3 உட்கொண்டால் கருச்சிதைவு, பிறப்புக் குறைபாடு வாய்ப்புகள் குறையும் - ஆய்வு
- எடப்பாடி- ஓபிஎஸ் அணிகள் இணையுமா? மோதி- பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு
- ''கமல் முரசொலி மேடையேறியது தற்காப்பு; ரஜினி கீழே அமர்ந்தது தன்மானம்''
- இந்தியாவின் 70-ஆவது சுதந்திர தினம்: பிரிட்டனை பற்றி இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












