ஜார்க்கண்டில் அரசு பள்ளியில் மாட்டிறைச்சி சமைத்த பள்ளி முதல்வர் கைது

பட மூலாதாரம், NIRAJ SINHA
ஜார்கண்டின் பாக்கூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாட்டிறைச்சி சமைத்ததற்காக அப்பள்ளியின் முதல்வர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாக்கூர் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் சைலேந்திர பிரசாத் பர்ன்வால் இந்த கைது நடவடிக்கையை உறுதி செய்துள்ளார்.
சர்தார் பிளாக்கில் உள்ள சோட்டா மொஹல்லன் ஆரம்ப நிலை பள்ளியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக சைலேந்திர பிரசாத் பர்ன்வால் கூறியுள்ளார்.
சர்தார் பிளாக்கை சேர்ந்த கல்வித்துறை அதிகாரி கொடுத்த புகார் அடிப்படைியல், இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது.
அரசு பள்ளிகளில் தடைசெய்யப்பட்ட இறைச்சியை மதிய உணவு திட்டத்தில் சமைத்ததற்காகவும், மத உணர்வுகளை புண்படுத்தியதற்காகவும் பள்ளி முதல்வர் ரோஸா ஹன்சதா மற்றும் அவருக்கு உதவியாக இருக்கும் உள்ளூர் கிராமவாசியான பிர்ஜு ஹன்சதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், NIRAJ SINHA
மாட்டிறைச்சியை பரிமாற குழந்தைகள் தயாரானார்களா என்ற கேள்விக்கு, பள்ளி குழந்தைகளின் உணவுக்காக கிராம மக்களிடம் முதல்வர் உணவு வேண்டியதாக விசாரணையில் தங்களது கவனதுக்கு வந்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அரசு பள்ளிகளில் இதுபோன்ற வழக்கம் தவரானது என்று அவர்கள் தெரிவித்தனர்.
பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டமாக பாக்கூர் உள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள்.
நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) டஜன் கணக்கான குழந்தைகள் பள்ளியைவிட்டு சென்று கிராமமக்களுடன் மாவட்ட தலைநகரை அடைந்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பள்ளி குழந்தைகள் உணவை உண்ணாமல் தங்களது பெற்றோர்களிடம், பள்ளியில் மாட்டிறைச்சி சமைக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
இது கிராம மக்களை கோபப்படுத்தியதால் அவர்கள் பள்ளியை சூழ்ந்து கொண்டனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் கிராம மக்களை சமாதனப்படுத்தி சூழலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












