சென்னையில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளின் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி தில்லியில் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் தற்போது சென்னையில் போரட்டத்தைத் துவக்கியுள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு அருகில் இன்று காலையில் அய்யாக்கண்ணு தலைமையிலான தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 50 பேர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தைத் துவக்கினர்.

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், கொள்முதல் செய்யப்பட்ட பாக்கி வைக்கப்பட்டிருக்கும் சுமார் ஒன்றரைக் கோடி ரூபாயை நிலுவைத் தொகையைத் தர வேண்டும், வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு மேல் முறையீடு செய்திருப்பதைத் திரும்பப் பெற வேண்டும், கரும்புக்கான நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலைகள் உடனடியாக அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், MD MUSTAKIM NADAV

32 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் சேர்ந்து, 32 நாட்கள் தொடர் போராட்டத்தை நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். ஆனால், காவல்துறை தொடர் போராட்டங்களை நடத்த அனுமதிப்பதில்லை என்று தெரிவித்தது.

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், PTI

இதையடுத்து, வெள்ளிக்கிழமையன்று மாலையில் அய்யாக்கண்ணுவுடன் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லும்படி கூறினார். ஆனால், அவர்கள் அதனை ஏற்கவில்லை. தற்போதும் அவர்கள், சேப்பாக்கம் பகுதியிலேயே தங்கியுள்ளனர்.

ஜூலை 10ஆம் தேதிவரை இந்தப் போராட்டம் நடக்குமென விவசாயிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்