சிங்கப்பூரில் ஓட்டுநர் இல்லாமல் ஓடும் வாடகைக் கார் சேவை தொடக்கம்

பட மூலாதாரம், Nutonomy

ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் வாடகைக் கார் சேவை உலகிலேயே முதல்முறையாக சிங்கப்பூரில் தொடங்கியுள்ளது.

காரில் ஏறுவதற்கு மற்றும் இறங்குவதற்கு, குறிப்பிட்ட இடங்களுக்கு இடையில் இனிமேல் பயணியர் எளிதாக பயணிக்கலாம்.

ஆனால் தற்போதைக்கு அவசரகால ஓட்டுநர் ஒருவர் அதில் இருப்பார்.

பட மூலாதாரம், Volvo

அமெரிக்காவில் இது போன்றதொரு சேவையை உபேர் நிறுவனம் தொடங்குவதற்கு முன்னர், புதிதாக தொடங்கியுள்ள நியுடோனோமி நிறுவனம் இந்த சேவையை ஆரம்பித்துள்ளது.

கூகுள் நிறுவனத்தால் இயக்கப்படுகின்ற தானியங்கி வாகனச் சேவையானது கலிஃபோர்னியாவில் பல ஆண்டுகளாக சோதனை முறையில் இயங்கி வருகிறது. ஆனால், அவை பொது மக்களின் சேவைக்கு வருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும்.