மக்களுக்கு இடையிலான வெறுப்புணர்வை நிராகரிக்க போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்

இளைஞர்கள் அரசியலிலும், சமூகப் பணிகளிலும் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்
படக்குறிப்பு, இளைஞர்கள் அரசியலிலும், சமூகப் பணிகளிலும் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

போலந்து பயணத்தின் கடைசி நாளில், மக்களுக்கு இடையிலான வெறுப்புணர்வை நிராகரிக்க வேண்டும் என்று கத்தோலிக்க இளைஞர்களை போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.

மக்களுக்கு இடையிலான வெறுப்புணர்வை இளைஞர்கள் நிராகரிக்க திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு

பட மூலாதாரம்,

படக்குறிப்பு, மக்களுக்கு இடையிலான வெறுப்புணர்வை இளைஞர்கள் நிராகரிக்க திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு

உலக நாடுகளிலிருந்து வந்திருந்த இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட மக்களிடம் உரையாற்றிபோது, எல்லைகளை தடைகளாக பயன்படுத்த மறுக்கும் புதிய மனித குலமாக உருவாக திருத்தந்தை அழைப்புவிடுத்தார்.

எல்லைகளை தடைகளாக பயன்படுத்த மறுக்கின்ற புதிய மனித குலமாக உருவாவோம் - திருத்தந்தை பிரான்சிஸ்

பட மூலாதாரம், Getty

படக்குறிப்பு, எல்லைகளை தடைகளாக பயன்படுத்த மறுக்கின்ற புதிய மனித குலமாக உருவாவோம் - திருத்தந்தை பிரான்சிஸ்

இன்றைய தொழில்நுட்ப மொழியை பயன்படுத்திய போப் பிரான்சிஸ், நல்லதொரு இதயத்தை தரவிறக்கம் செய்யவும், உடனடி நுகர்வுக்கு பதிலாக உலகை மாற்ற முயலவும் ஊக்கமூட்டினார்.

நல்லதொரு இதயத்தை தரவிறக்கம் செய்யவும், உடனடி நுகர்வுக்கு பதிலாக உலகை மாற்ற முயலவும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தல்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, நல்லதொரு இதயத்தை தரவிறக்கம் செய்யவும், உடனடி நுகர்வுக்கு பதிலாக உலகை மாற்ற முயலவும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தல்

கராகோவின் புறவெளியில் திறந்தவெளியில் நடைபெற்ற திருப்பலியின்போது, புனித பயணிகள் கொடிகளை அசைத்து கொண்டும், இசைக்கு ஏற்ப அசைந்தாடியும், தங்களை தாங்களே புகைப்படங்கள் எடுத்தும் திருவிழா சூழ்நிலை உருவாகியிருந்தது.

போலந்தில் மேற்கொண்ட இப்பயணத்தின்போது அஸ்விட்ச் சித்திரவதை முகாமை திருத்தந்தை சந்தித்தார்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, போலந்தில் மேற்கொண்ட இப்பயணத்தின்போது அஸ்விட்ச் சித்திரவதை முகாமை திருத்தந்தை சந்தித்தார்.

இந்த திருப்பலியானது, போப் பிரான்சிஸ் கிழக்கு ஐரோப்பாவிற்கு முதல்முறை வந்துள்ள பயணத்தின் ஐந்து நாட்கள் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

கடைசி நாள் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியில் இரண்டு மில்லியனுக்கு மேலானோர் பங்கேற்றுள்ளனர்

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, கடைசி நாள் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியில் இரண்டு மில்லியனுக்கு மேலானோர் பங்கேற்றுள்ளனர்

இதன் போது போப் பிரான்சிஸின் அஸ்விட்ச் சித்திரவதை முகாம் சந்திப்பும் அடங்குகிறது.