தாய்லாந்து மன்னர் பூமிபோல் அடுல்யதேஜ் அரியணையில் ஏறி 70 ஆண்டுகள் நிறைவு

பட மூலாதாரம், Reuters

தாய்லாந்தில், மன்னர் பூமிபோல் அடுல்யதேஜ் அரியணையில் ஏறி 70 ஆண்டுகள் நிறைவை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.

பாங்காக்கில், காவி வண்ண அங்கிகளை அணிந்த 770 புத்த பிக்குகளின் தலைமையில் விழா நிகழ்ச்சிகளும், மத சடங்குகளும் நடைபெற்றன.

பட மூலாதாரம், EPA

புத்த பிக்குகளை சுற்றி, மன்னருக்கு நெருங்கிய தொடர்புடைய மஞ்சள் நிற ஆடையை பொதுமக்கள் அணிந்திருந்தார்கள்.

உலகிலேயே நீண்ட காலமாக மன்னராக ஆதிக்கம் செய்துவரும் பூமிபோல் அடுல்யதேஜுக்கு 88 வயது ஆகிறது. பலரும் மன்னரின் உடல் நிலை குறித்து கவலை தெரிவித்திருந்தனர்.

பட மூலாதாரம், Reuters

இந்த வார தொடக்கத்தில் மன்னர் பூமிபோல் இதய அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

மேலும், பல மாதங்களாக பொது நிகழ்வுகளில் அவர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்தில் உள்ள பிளவுப்பட்ட அரசியல் களத்தில் மன்னர் பூமிபோல் மத்தியஸ்தராக இருந்து செயல்படக்கூடியவர்.

பலருடைய மதிப்பிற்குரிய மனிதராகவும் அவர் விளங்கி வருகிறார்.