புலி கோவில் இனி புத்த கோவில் மட்டுமே
தாய்லாந்தின் கான்சானபுரி மாகாணத்திலுள்ள சர்ச்சைக்குரிய புத்த கோவிலிருந்து 137 புலிகளை அகற்றிவிட டஜன்கணக்கான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பட மூலாதாரம், Reuters
இந்த புலி கோவிலிலுள்ள புலிகளை பிடிப்பதற்கு மயக்க ஊசிகளை துப்பாக்கியில் வைத்து பயன்படுத்த கால்நடை மருத்துவர்கள் தயாராகி வருகிறார்கள்.

பட மூலாதாரம், Reuters
அவற்றை பிடித்து அருகிலுள்ள வனவிலங்கு சரணாலயத்தில் விடவுள்ளனர்.

பட மூலாதாரம், Reuters
கூண்டிலிருக்கும் புலிகளோடு புகைப்பட எடுத்துக்கொள்ளவும், அவைகளைக் கயிற்றால் கட்டி அவைகளுடன் சுற்றுலாப் பயணிகள் நடக்கவும் அனுமதித்ததன் மூலம் ஆண்டுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேலான வருமானத்தை இந்த கோவில் ஈட்டி வந்தது.

பட மூலாதாரம், Reuters
விலங்குகளின் பாகங்களை கடத்துவதாகவும், புலிகளை பிரம்பால் அடித்தும், குறுகிய சங்கிலிகளால் கட்டியும் மோசமாக நடத்துவதாகவும் கூறி, பல ஆண்டுகளாக இந்த கோவிலை மூடிவிட வேண்டுமென வனவிலங்கு ஆர்வலர்கள் பரப்புரை மேற்கொண்டு வந்தது குறிப்பிடதக்கது








