உலகின் மிகவும் வயதான பூனை உயிரிழந்தது

உலகின் மிகவும் வயதான பூனை அதன் 30 ஆவது வயதில் டெக்ஸாஸில் உள்ள அதன் உரிமையாளரின் வீட்டில் உயிரிழந்துள்ளது.

உயிரிழந்துள்ள ஸ்கூட்டர்
படக்குறிப்பு, உயிரிழந்துள்ள ஸ்கூட்டர்

சியாமி இனத்தைச் சேர்ந்த இந்தப் பூனையின் பெயர் ஸ்கூட்டர்.

ஆண் பூனையான ஸ்கூட்டர் மனித வயதில் கிட்டத்தட்ட 136 ஆண்டுகளுக்கு சமமான காலம் வாழ்ந்துள்ளதாக அதன் உரிமையாளர் கூறுகிறார்.

ஸ்கூட்டர் பயணங்களை மிகவும் விரும்பியதாக கூறும் அதன் பெண் உரிமையாளர், தனது நீண்ட ஆயுட்காலத்தில் காலஞ்சென்ற அந்தப் பூனை 45 அமெரிக்க மாநிலங்களுக்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.