மதகுரு கொலை:இரானில் சவுதி தூதரகம் தாக்கப்பட்டது
பிரபலமான ஷியாப் பிரிவு முஸ்லிம் மதகுரு ஒருவருக்கு சவுதி அரேபியா மரண தண்டனையை நிறைபவேற்றியதை அடுத்து, தெஹ்ரானிலுள்ள சவுதி தூதரகத்துக்குள் இரானிய போராட்டக்காரர்கள் அதிரடியாக நுழைந்துள்ளனர்.

பட மூலாதாரம், MIZANONLINEIR
அப்படி நுழைந்த அவர்கள் தூதரக் கட்டிடத்துக்கும் தீ வைத்துள்ளனர்.
எனினும் ஒரு மணி நேரத்துக்கு பிறகு காவல்துறையினர் கூட்டத்தை கலைத்தனர்.

பட மூலாதாரம், EPA
பயங்கரவாதக் குற்றச்சாட்டின் பேரில் ஷேக் நிம்ர்-அல்-நிம்ர் உட்பட 47 பேருக்கு சவுதி அரேபியா சனிக்கிழமை மரண தண்டனையை நிறைவேற்றியது.
ஆனால் சவுதி அரேபிய ராஜ வம்சத்துக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து, அவர்களை கடுமையாக விமர்சித்ததாலேயே அவர் கொல்லப்பட்டார் என ஷேக் நிம்ரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty
அவரது கொல்லப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இரானின் அதியுயர் மதத்தலைவர் அயத்துல்லா கமினேய், சவுதி அரசியல்வாதிகள் இறைவனால் பழவாங்கப்படுவர் எனக் கூறியுள்ளார்.
மதத்துக்காக தேவையில்லாமல் ஒரு தியாகியின் ரத்தம் சிந்தப்பட்டுள்ளது எனவும் அயத்துல்லா அலிகமினேய் விமர்சித்துள்ளார்.








