ஐ எஸ்ஸுக்கு துருக்கி, சவுதி, கத்தார் ஆகியவை ஆதரவு: பஷார் அல் அஸத்

இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் பயங்கரவாதிகள் வளர்வதற்கு சிரியா ஒரு களமாக உள்ளது என்பதை நாட்டின் அதிபர் பஷார் அல் அஸத் மறுத்துள்ளார்.

பஷார் அல் அஸதுக்கு ரஷ்யாவின் ஆதரவு உள்ளது

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, பஷார் அல் அஸதுக்கு ரஷ்யாவின் ஆதரவு உள்ளது

இத்தாலியத் தொலைக்காட்சி ஒன்றில் பேசும்போதே சிரியாவின் அதிபர் இதைத் தெரிவித்தார்.

துருக்கி, சவுதி அரேபியா, கத்தார் உட்பட பல வெளிநாடுகளின் உதவியுடனேயே, சிரியாவில் பயிற்சி பெற்ற அந்த ஜிகாதிகள் தாக்குதல்களை நடத்துகின்றனர் என அவர் கூறுகிறார்.

பயங்கரவாதிகள் என அவர் கூறுவோரின் பிடியில் நாட்டின் சில பகுதிகள் இருக்கும் நிலையில், சிரியாவில் தேர்தல் மூலம் இடைக்கால ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவரும் நடவடிக்கையை முன்னெடுக்க முடியாது எனக் கூறுகிறார்.

ஐ எஸ் அமைப்பின் பயங்கரவாதிகளை எதிர்த்து போராடும் நடவடிகையில் ரஷ்யாவுடன் மேற்குலக நாடுகள் இணைந்து கொள்வதற்கு, அதிபர் அஸத் பதவி விலக வேண்டும் எனும் முன் நிபந்தனையை அந்நாடுகள் வலியுறுத்தக் கூடாது என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவராவ் புதன்கிழமை தெரிவித்திருந்தர்.