'சாதி,மத பாகுபாடுகளுக்கு இடமில்லை': இந்தியப் பிரதமர்

பட மூலாதாரம், Getty
இந்தியாவின் 69வது சுதந்திர தினத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி, ஊழலுக்கும் சாதி,மத பாகுபாடுகளுக்கு எதிராகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்தியாவை ஊழல் வண்டுபோல் அரித்துவருவதாகவும் பிரதமர் எச்சரித்துள்ளார்.
சாதி, மத அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு இந்தியாவில் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் ஒற்றுமையை அச்சுறுத்தும் 'விஷம்' அதுதான் என்றும் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஆனால், மோடிக்கு சார்பான இந்து தேசியவாத அமைப்புகளில் சிலவற்றால் சிறுபான்மை சமூகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பங்களில் அவர் பெரிதாக எதுவும் பேசியிருக்கவில்லை என்றும் அவரது விமர்சகர்கள் அடிக்கடி குற்றம்சாட்டியுள்ளனர்.
நாடெங்கிலும் மக்கள் புதிய தொழில்களைத் தொடங்குவதற்கு கடனுதவிகளை வழங்கவுள்ளதாகவும் நரேந்திர மோடி இன்றைய உரையில் உறுதியளித்துள்ளார்.








