ஜிம்பாப்வேயின் 'பெருமைமிக்க சிங்கத்தை' கொன்றவர் "அமெரிக்க சுற்றுலாப் பயணி"

ஜிம்பாப்வேயின் மிகப் பிரபலமான சிங்கத்தை அமெரிக்கச் சுற்றுலாப் பயணி ஒருவரே கொன்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சிசிலின் கொலை ஜிம்பாப்வேயில் கோபாவேசத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது

பட மூலாதாரம், paula french

படக்குறிப்பு, சிசிலின் கொலை ஜிம்பாப்வேயில் கோபாவேசத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது

'சிசில் த லயன்' என்று அறியப்பட்ட அந்தச் சிங்கத்தைக் கொல்ல தொழில்ரீதியில் வேட்டையாடும் ஒருவரும் உள்ளூர் நில உரிமையாளருமான ஒரு நபருக்கு, அந்தச் சுற்றுலாப் பயணி 50,000 டாலர்களை அளித்தார் என்று ஜிம்பாப்வேயின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சிறப்பு படையினர் கூறுகிறார்கள்.

அந்தச் சிங்கத்தை ஹ்வாங்கே தேசிய சரணாலயத்திலிருந்து, தந்திரோபாயமாக வெளியில் ஈர்த்து அந்தச் சுற்றுலாப் பயணி அதன் மீது அம்பை எய்தார் என்று அந்தச் சிறப்புப் படையினர் கூறுகிறார்கள்.

பின்னர் அந்தச் சிங்கம் சுடப்பட்டு, அதன் தலை வெட்டப்பட்டு, தோலும் உரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இருவர் புதன்கிழமையன்று நீதிமன்றத்தின் முன்னர் நிறுத்தப்படுகின்றனர்.

கருப்பு நிறப் பிடறியுடன் காணப்பட்ட சிசில், ஜிம்பாப்வே வருபவர்களை பெரிதும் கவரும் ஒரு விலங்காக இருந்தது.