ஐ.அரபு எமிரேட்ஸ்: பேஸ்புக் கருத்தால் அமெரிக்கருக்கு சிக்கல்

பட மூலாதாரம், AFP

பேஸ்புக்கில் தெரிவித்த கருத்துக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அமெரிக்கத் தொழிலாளி ஒருவர் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று நம்பப்படுகின்றது.

ரயான் பேட் என்ற ஹெலிகாப்டர் மெக்கானிக், சுகயீன விடுமுறையில் புளோரிடாவிலுள்ள தனது வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், அங்கிருந்தபடி தனது முதலாளியை விமர்சித்திருந்தார்.

அவர் தனது "நிறுவனத்தை முதுகில் குத்துபவர்கள்" என்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்களின் இனத்தை அவதூறாகவும் குறிப்பிட்டு விமர்சித்திருந்தார்.

இந்த கருத்துக்கள் ஐக்கிய அரபு எமிரெட்ஸின் கறாரான அவதூறு சட்டத்தை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர் அமெரிக்காவிலிருந்து ஐக்கிய அரபு எமிரெட்ஸுக்கு திரும்ப வந்தவுடன் தடுத்து வைக்கப்பட்டார்.

இவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்படும் பட்சத்தில் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.