யுக்ரேன் Vs ரஷ்யா: கார்கிவ் தாக்குதலில் இந்திய மாணவர் பலி - இதுநாள் வரை நடந்தது என்ன?

பட மூலாதாரம், Reuters
யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஆறாவது நாளான செவ்வாய்க்கிழமையும் சண்டைகள் தொடர்கின்றன.
திங்கட்கிழமை அன்று ஏவுகணைத் தாக்குதல்கள் நாட்டின் இரண்டாவது நகரமான கார்கிவில் டஜன் கணக்கான பொதுமக்களைக் கொன்றன, அதே நேரத்தில் தலைநகரான கீயவில் விமானத் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் மீண்டும் ஒலித்தன.
கார்கிவ் நகரில் பொதுமக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகள், இன்று ரஷ்ய படையினரின் ஏவுகணை மற்றும் ஷெல் குண்டு தாக்குதல்களால் இலக்கு வைக்கப்பட்டன.
இதில் கர்நாடகாவைச் சேர்ந்தவருமான நவீன் சேகரப்பா பலியாகியுள்ளார். இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியிருக்கிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
வசிப்பிடத்தில் இருந்து உணவுக்குத் தேவையான பொருட்களை வாங்க வெளியே சென்றபோது ஷெல் குண்டு தாக்குதலில் நவீன் சிக்கியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
அந்த நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
கர்நாடக முதல்வர் இரங்கல்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
கார்கிவ் நகரில் கர்நாடக மாணவர் நவீன் மரணம் அடைந்தது தொடர்பாக அவரது குடும்பத்தினரை அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்திருக்கிறார். யுக்ரேனின் ஹாவேரியைச் சேர்ந்த நவீன் சேகரப்பாவின் தந்தை சேகர் கெளடாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.நவீனைப் பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற்ற பொம்மை, துயரமான இந்த நேரத்தில் குடும்பத்துடன் தாம் இருப்பதாகக் கூறினார்.
"இது ஒரு பெரிய அடி. எல்லாம் வல்ல இறைவன் நவீனுக்கு நித்திய சாந்தியை வழங்கட்டும். நடக்கும் துயரத்தைத் தாங்க நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும்," என்று பசவராஜ் பொம்மை கூறினார்.நவீனின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக நீவின் தந்தையுடனான உரையாடலின் போது பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
முன்னதாக காலையில்தான் தமது மகனுடன் செல்பேசியில் பேசியதாக சேகரப்பா கூறினார். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை பெற்றோரை தொடர்பு கொள்வதை நவீன் வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும் சேகரப்பா கூறினார்.
அப்பட்டமான போர் குற்றம் - யுக்ரேனிய அதிபர்
யுக்ரேனின் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, கார்கிவ் மீது ரஷ்ய குண்டுவீச்சை "போர் குற்றம்" என்று கூறினார்.
கார்கிவ் நகரின் சுதந்திர சதுக்க கட்டடத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் காட்சியை யுக்ரேனிய வெளியுறவு அமைச்சர் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதில் இடம்பெற்ற காணொளியை பிபிசி சரிபார்த்துள்ளது.
இந்த காணொளி காட்சிகள் உங்கள் மனதுக்கு சங்கடத்தை தரலாம் என எச்சரிக்கிறோம். பலகீனமானவர்கள் இந்த காணொளியை பார்ப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
வடக்கு நகரமான செரீனிஹிவ்வில் கடுமையான ஷெல் தாக்குதல்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யா பல முனைகளில் யுக்ரேனைத் தாக்குகிறது. ஆனால், யுக்ரேனிய எதிர்ப்பால் அதன் முன்னேற்றம் தாமதமடைகிறது.
மூன்று நகரங்களும் யுக்ரேனின் கட்டுப்பாட்டில் உள்ளன.
போர்க்களங்களில் இருந்து விலகி, பொருளாதார மற்றும் ராஜீய நகர்வுகள் தொடர்ந்தன.
பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரூபிள் மதிப்பில் சரிவைத் தடுக்க ரஷ்யர்கள் முயன்ற நிலையில், வெளிநாடுகளுக்கு பணத்தை நகர்த்துவதற்கு அதிபர் புதின் தடை விதித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் அரிதான அவசரகால அமர்வு, பொதுச்செயலாளரிடமிருந்து விரோதப் போக்கை உடனடியாக நிறுத்துவதற்கான கோரிக்கையைக் கேட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை
யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஐந்தாவது நாளில், இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பெலாரூஸில் கூடி 5 மணி நேரம் பேசினர். ஆனால், முடிவு எட்டப்படவில்லை.
அமர்வு ஒரு திருப்புமுனையைக் கொண்டுவரும் என்று சிறிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், யுக்ரேனிய அதிகாரி ஒருவர், இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு முன் இரு தரப்பினரும் மேலதிக ஆலோசனைகளுக்காக அந்தந்த தலைநகரங்களுக்குத் திரும்புவார்கள் என்று கூறினார்.
இரு தரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டதாகவும், அடுத்த சில நாட்களில் மீண்டும் சந்திப்போம் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், ANADOLU AGENCY VIA GETTY IMAGES
இரவு நேர உரையில், கார்கிவ் மீதான தொடர்ச்சியான தாக்குதலின் போது பொதுமக்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டதற்கு நேரில் கண்ட சாட்சிகள் இருப்பதாக, யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி கூறினார்.
யுக்ரேன் மீதான வான்வழிப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை, மேற்கு நாடுகள் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். அது ரஷ்யாவுடன் நேரடி மோதலுக்கு இழுக்கக்கூடும் என்ற அச்சத்தில் அமெரிக்கா இதுவரை நிராகரித்த ஒன்றாகும்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்கள், கார்கிவில் ராக்கெட்டுகள் தரையிறங்குவதைக் காட்டியது. ஆனால், அதை அடர்ந்த நகர்ப்புற பகுதியில் நடைபெறும் பொதுவான கிளஸ்டர் வெடிமருந்துத் தாக்குதல் என்று, சில பாதுகாப்பு ஆய்வாளர்கள் விவரித்துள்ளனர்.
64 கி.மீ. வரை நீண்டுகொண்டிருக்கும் ரஷ்ய ராணுவத் தொடரணி
குடியிருப்புப் பகுதிகளை குறிவைப்பதை ரஷ்யா முன்பு மறுத்தது. அதே சமயம், புதிய செயற்கைக்கோள் படங்கள், கீயவின் வடக்கே சுமார் 64 கி.மீ. வரை நீண்டுகொண்டிருக்கும் ரஷ்ய ராணுவத் தொடரணியைக் காட்டியது.

பட மூலாதாரம், MaxarCopyright
ஆனால், தலைநகரின் புறநகரில் புதிய சண்டைகள் பற்றிய செய்திகள் திங்கள்கிழமை மாலை குடியிருப்பாளர்களை பதுங்குமிடங்களுக்குத் தள்ளியது.
சமூக ஊடகங்களில் பரவும் மற்றொரு வீடியோ, ரஷ்ய தாக்குதலின் அழுத்தத்திற்கு உள்ளான மற்றொரு நகரமான செரீனிஹிவில் உள்ள எரியும் ஷாப்பிங் சென்டரில் பெரும் புகை மேகங்களைக் காட்டியது.
செரீனிஹிவில் உள்ள ஒரு ஆசிரியர், ஒக்ஸானா புரியாக், பிபிசியிடம் நிலைமை "திகில் படம் போல் உள்ளது" என்றார். "எங்கள் இதயம் உடைந்துவிட்டது, எங்களுக்கு எதுவும் புரியவில்லை," என்றும் அவர் கூறினார்.
தெற்கில், ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரைமியாவிற்கு அருகிலுள்ள மரியுபோல் நகரின் முக்கிய மூலோபாய துறைமுகத்தை, ரஷ்யப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கின்றன. ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் தாயகமான ஸபோரிஸ்யா, ரஷ்யாவின் கைகளில் சிக்கியது என்ற செய்தியை யுக்ரேன் மறுத்தது.
யுக்ரேன் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, பிபிசியிடம் பேசுகையில், நாடு முழுவதும் நிலைமை "தீவிரமாக இருந்தாலும், நிலையாக உள்ளது" என்றார்.
"ஒவ்வொரு நாளும் எதிரிகள் மேலும் மேலும் படைகளை அனுப்புகிறார்கள். ஆனால், நமது புகழ்பெற்ற ஆயுதப்படைகள் அடிப்படையில் கீயவிற்கு வரும் அனைத்தையும் அழித்து வருகின்றன," என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
ஐ.நா மனித உரிமைகள் ஆணைய தலைவர் மிஷெல் பேச்லெட், தாக்குதலில் இருந்து தப்பிக்க நிலத்தடி ரயில் நிலையங்கள் போன்ற தற்காலிக பதுங்குமிடங்களில் மில்லியன் கணக்கான பொதுமக்கள் பதுங்கியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றார்.
வியாழன் அன்று படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கணக்குப்படி, ஏழு குழந்தைகள் உட்பட பொதுமக்கள் 102 பேர் இறந்துள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். "உண்மையான புள்ளிவிவரங்கள், அதிகமாக இருக்குமென நான் அஞ்சுகிறேன்" என்று அவர் கூறினார்.

பிற செய்திகள்:
- உலகில் எந்த நாட்டிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன?
- யுக்ரேன்-ரஷ்யா மோதலால் இலங்கைக்கு என்ன சிக்கல்?
- யுக்ரேனில் இருந்து தப்பிக்க 28 மணி நேரம் காரில் பயணித்த இந்திய மாணவிகள்
- ராகுல் விழா மேடையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கொதித்தது ஏன்?
- கோரக்பூரின் ’வாழ்வா சாவா’ போட்டியில் வெற்றிபெறுவாரா உ.பி. முதல்வர் யோகி?
- மு.க. ஸ்டாலின்: "திராவிட மாடல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் விதைப்பேன்"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












