அமெரிக்க அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் 2020: டிரம்ப் vs பைடன் போட்டி பற்றிய முக்கிய தகவல்கள்

us presidential election 2020

அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகியவற்றுக்கான தேர்தலின் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

மொத்தம் 1,216 பேர் அதிபர் தேர்தலில் களத்தில் உள்ளனர். குடியரசு கட்சியைச் சேர்ந்த அதிபர் டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக இருக்கின்றனர்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தல் ஒவ்வொரு முறையும் நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமையில் நடைபெறும்.

நாடாளுமன்ற மற்றும் அதிபர் தேர்தலுடன் 13 அமெரிக்க மாகாணங்களின் ஆளுநர்களுக்கான தேர்தலும் நடக்கிறது.

முதல் வாக்குப்பதிவு, முதல் தேர்தல் முடிவு எங்கு?

ஒன்பது வெவ்வேறு நேர மண்டலங்களைக் கொண்டுள்ள அமெரிக்காவில், 'ஈஸ்டர்ன் டைம்' எனும் நேர மண்டலத்தில் உள்ள கிழக்குப் பகுதி மாகாணங்களில் வாக்குப்பதிவு நவம்பர் 3 (செவ்வாய்) அன்று முதலில் தொடங்கியது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள வெர்மாண்ட் மாகாணத்தில் முதலில் வாக்குப்பதிவு தொடங்கியது.

நியூ ஹேம்ப்ஷையர் மாகாணத்தில் உள்ள சின்னஞ்சிறு நகரமான டிக்ஸ்வைல் நாட்ச் நகரம் அமெரிக்காவிலேயே தேர்தல் முடிவுகளை வெளியிடும் முதல் பகுதிகளில் ஒன்றாக கடந்த 60 ஆண்டுகளாக இருந்து வருகிறது.

அங்கு நடந்த வாக்குப்பதிவின் முடிவுகள் உள்ளூர் நேரப்படி செவ்வாய் நள்ளிரவு வெளியானது.

12 பேர் வசிக்கும் டிக்ஸ்வைல் நாட்ச் நகரில் பதிவான ஐந்து வாக்குகளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுக்கே சென்றுள்ளன. அதிபர் டிரம்ப் ஒரு வாக்கைக் கூடப் பெறவில்லை.

சேனிடைசர்கள் பற்றி எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்காவில் பலரும் தபால் மூலம் வாக்களித்துள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் நெருக்கடி வேறு வகையிலும் தேர்தலை பாதித்துள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

ஆல்கஹாலை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட சேனிடைசர்கள் வாக்குச்சீட்டுகளை சேதப்படுத்துவதற்கு வாய்ப்புண்டு என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

சேனிடைசர்கள் ஒட்டியுள்ள வாக்குச் சீட்டுகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒட்டிக் கொண்டு அவற்றை சேதப்படுத்த வாய்ப்புள்ளது என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முன்பு வாக்காளர்கள் மற்றும் வாக்கு சாவடி ஊழியர்களின் கைகள் ஈரமாக இல்லாமல் காய்ந்து இருக்க வேண்டும் என்று இந்த மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் - கட்டுப்பாடுகள், அனுமதி

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அமெரிக்காவில் நடந்து வரும் அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவில் நேரடியாக வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம் என்று நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

corona virus news united staes

கோவிட்- 19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நேரடியாக வந்து வாக்குகளை செலுத்த விரும்பினால் வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் தங்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக அவர்கள் தெரிவிக்க வேண்டும் .

அவர்களுக்கு முகக்கவசம் அணிவது மற்றும் வாக்கை செலுத்துவதற்கு முன்பும், பின்பும் சோப் அல்லது சேனிடைசர் கொண்டு கைகளை தூய்மைப்படுத்திக் கொள்வது ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பிறரிடமிருந்து குறைந்தது 6 அடி தூரம் அவர்கள் விலகி இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தல் எப்படி நடக்கும்?

'எலக்டோரல் காலேஜ்' வாக்குகள் எனப்படும் வாக்காளர் தொகுதிகள் எத்தனையை ஒருவர் கைப்பற்றுகிறார் என்பதை வைத்தே அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஒவ்வொரு மாகாணமும் மக்கள் தொகைக்கு ஏற்ப, குறிப்பிட்ட எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களைப் பெற்றிருக்கும். மொத்தம் உள்ள 538 எலக்டோரல் காலேஜ் வாக்குகளில் , 270 அல்லது அதற்கும் மேலான உறுப்பினர்களின் வாக்குகளைப் பெறும் வேட்பாளர்தான் வெற்றியாளர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் எப்போது தெரியும்?

வாக்கு எண்ணிக்கை முடிய பல நாட்கள் ஆகும். ஆனால் தேர்தல் முடிந்த மறுநாள் காலை யார் வெற்றியாளர் என்பதை கணித்து விட முடியும்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலால் தபால் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் வெற்றியாளர் யார் என்பதை தெரிந்துகொள்ள தாமதம் ஆகலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

1992இல் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அப்போதைய அதிபர் ஜார்ஜ் ஹெச். டபிள்யூ புஷ் ஜனநாயக கட்சியின் பில் கிளிண்டனிடம் தோல்வியடைந்தார்.

ஒருவேளை டிரம்ப் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்தால் பதவியில் இருந்த அதிபர் ஒருவர் மீண்டும் போட்டியிட்டபோது தோல்வி அடைவது 1992க்கு பிறகு இதுவே முதல்முறை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: